Published:Updated:

ஆந்திராவில் 23 தமிழர்கள் சித்ரவதையா?

ஆந்திராவில் 23 தமிழர்கள் சித்ரவதையா?
ஆந்திராவில் 23 தமிழர்கள் சித்ரவதையா?

ஆந்திர காவல்துறையினர் 23 தமிழர்களை சிறிய அறையில் அடைத்துவைத்து சித்தரவதை செய்வதாக புகார் எழுந்துள்ளது. 

ஆந்திராவில் 23 தமிழர்கள் சித்ரவதையா?

கோப்புப்படம்

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்ட காவல்துறையினர் கடந்த 13-ம் தேதி திருப்பதியிலிருந்து கடப்பா நோக்கிவந்த 3 பேருந்துகளை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது பேருந்திலிருந்த 23 தமிழர்களை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். தமிழில் பேசிய காரணத்துக்காகவே அவர்கள் கைதுசெய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர்களைப் பற்றிய செய்திகள் எதுவும் ஊடகங்களுக்கு அளிக்கப்படவில்லை. செய்தி சேகரிக்கவும் அனுமதிக்கப்படவில்லை. கைதுசெய்யப்பட்டு மூன்று நாள்கள் ஆன நிலையிலும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை. அவர்கள், செம்மரம் வெட்ட வந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. அதனால், அவர்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்வதற்காக ஒரு அறையில் அடைத்துவைத்து சித்ரவதை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுவரையில், அவர்கள் யாரும் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை என்று தெரிகிறது.