Published:Updated:

கென்யாவில் தென்பட்ட வெள்ளை நிற ஒட்டகச்சிவிங்கி!

எம்.குமரேசன்
கென்யாவில் தென்பட்ட வெள்ளை நிற ஒட்டகச்சிவிங்கி!
கென்யாவில் தென்பட்ட வெள்ளை நிற ஒட்டகச்சிவிங்கி!

கென்யாவில் அபூர்வ வெள்ளை நிற ஒட்டகச்சிவிங்கிகள் தென்பட்டுள்ளன.

இங்குள்ள, Ishaqbini வனப்பகுதியில் இரு வெள்ளை நிற ஒட்டகக்சிவிங்கிகளை மக்கள் பார்த்துள்ளனர். அதை வீடியோவும் எடுத்து யூடியூப்பில் பதிவேற்றியுள்ளனர். தாயும் குட்டியுமாக இவை இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 

இதற்கு முன், தான்சேனியாவில் உள்ள தராங்கிர் வனத்தில் வெள்ளை நிற ஒட்டகச்சிவிங்கி ஒன்று வசித்தது. மக்கள் அதற்கு 'ஓமோ' எனச் செல்லப் பெயரிட்டு அழைத்தனர். 2016-ம் ஆண்டு ஓமோவை  கடைசியாக மக்கள் பார்த்துள்ளனர். அதற்குப் பிறகு ஓமோ தென்படவில்லை.

மரபணுக் குறைபாடு காரணமாக வனவிலங்குகள் நிறம் மாறுவதாகச் சொல்லப்படுகிறது. லாசிஸம் என்ற நோய் பாதிப்பு காரணமாக மிருகங்கள் இயல்பான நிறத்தை இழக்கின்றன. தோளில் உள்ள செல்கள் தேவையான மெலனினை உற்பத்தி செய்ய முடியாமல் போவதால் தோள் வெளிறி விடுகிறது. கண்ணிலும் கூட மெலனின் உற்பத்திக் குறைவதால் இவற்றின் கண்கள் சிவப்பு வர்ணத்தில் காணப்படும். ஒட்டகச்சிவிங்கிகள் மட்டுமல்ல வெள்ளைப்புலி, வெள்ளைச்சிங்கம், வெள்ளை நிற மான், வெள்ளை நிற பென்குவின்கள் கூட உள்ளன.