ன்றைய நாகரிகமும் நேற்றைய வரலாறும் சந்தித்தால்... ரசனை, ரகளைதானே! நேற்றைய தலைவர்களை இன்றைய ட்ரெண்டில் வரைந்து அசத்துகிறார் ஓவியர் அமித் ஷிமோனி. 

ஹிப் ஹாப் தலைவா!

கூலிங்கிளாஸ் போட்ட மாடர்ன் மகாத்மா, காதில் சிகரெட் செருகியிருக்கும் வின்ஸ்டன் சர்ச்சில், செம கூல் மா சே துங், ரிச் லுக் ஆபிரகாம் லிங்கன், ஸ்டட் காதர் லெனின்... என இவரது ஒவ்வோர் ஓவியமும் செம ஸ்டைல் ஸ்டேட்மென்ட்!

ஹிப் ஹாப் தலைவா!

ஹிப்ஸ்டர் என்பது, கரன்ட் ட்ரெண்டைக் கடைப்பிடிப்பவர்களைக் குறிக்கும். உலகத் தலைவர்களை இன்றைய ட்ரெண்டில் வரைந்து, அதற்கு 'ஹிப்ஸ்டோரி’ என பெயர் வைத்திருக்கிறார் அமித்.

ஹிப் ஹாப் தலைவா!
ஹிப் ஹாப் தலைவா!

ஓவியங்களுக்குள் சில குறியீடுகளையும் வைத்திருக்கிறார் அமித். சே குவேரா பாக்கெட்டில் அமெரிக்க ஸ்பிரிட் டொபாக்கோ சிகரெட், அவரது தலையில் அடிடாஸ் தொப்பி, ஜான் எஃப் கென்னடி அணிந்திருக்கும் டி-ஷர்ட்டில் முடி மட்டும் தெரியும் மர்லின் மன்றோ புகைப்படம், காந்தி கழுத்தில் இருக்கும் மெல்லிசான ஜெபமாலை என அமித் ஏதேதோ செய்தி சொல்ல, திட்டிக் குவித்தும் லைக்ஸ் குவிக்கிறது அமித் ஓவியங்கள்!

ஹிப் ஹாப் தலைவா!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு