Published:Updated:

'யாருக்கய்யா வேணும் புல்லட் ரயில்' - கீழடியில் கொதித்த மன்சூர் அலிகான்!

'யாருக்கய்யா வேணும் புல்லட் ரயில்' - கீழடியில் கொதித்த மன்சூர் அலிகான்!
'யாருக்கய்யா வேணும் புல்லட் ரயில்' - கீழடியில் கொதித்த மன்சூர் அலிகான்!

பிஜேபி அரசாங்கம் தமிழர்களின் நாகரீகத்தை இருட்டடிப்பு செய்ய நினைக்கிறது. அதை நான் விடமாட்டேன் . அவர்களுக்கு எதிராக உண்ணாரவிரதம் இருப்பேன் என்று நடிகர் மன்சூர்அலிகான் கீழடியில் கூறியுள்ளார்.


   

சிவகங்கை மாவட்டம், கீழடிக்கு நடிகர் மன்சூர்அலிகான் வந்திருந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்தார். "கடல்வாணிபத்தில் தற்சார்பு நிலையில் நூறு நாடுகளுக்கு மேல் ஐரோப்பிய நாடுகளுக்கும் பாய்மரக்கப்பல் மூலமாக தொழில் செய்து வந்தவர்கள்தான் தமிழர்கள். சாதி சமய பூசல்களுக்கு அப்பாற்பட்டு வாழ்ந்த சமூகம் தமிழ் சமுதாயம் என்பதற்கு சான்று கீழடியில் கிடைத்திருக்கும் பொருட்கள்தான் தமிழர்களின் அடையாளம். மத்திய, மாநில அரசுகள் கக்கூஸ் கட்ட பலகோடி ரூபாய்களை ஒதுக்கீடு செய்கிறது. ஆனால் நம் முப்பாட்டன் அந்த காலத்திலேயே கக்கூஸ் கட்டி வாழ்ந்திருக்கிறான். இதையெல்லாம்  மத்திய அரசு இருட்டடிப்பு செய்து வருகிறது. நம் நாகரீகத்தை மறைத்து நம் வாய்யில்  மண்ணை போட்டு மூட பார்க்கிறது பிஜேபி அரசாங்கம். தென்னை மரங்களை நடுவதற்கான குழிகளாக ஆங்காங்கே தோண்டியிருக்கிறார்கள். தமிழர்கள் மீனவர்கள் பிரச்னை, கச்சதீவு பிரச்னை, மீத்தேன் பிரச்னை என தமிழக மக்கள் பாதிக்கப்ட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் பிரதமர் மோடி புல்லட் ரயில் விடுவது பற்றி ஜப்பான் பிரதமரோடு பேசிக்கொண்டிருக்கிறார். யாருக்கய்யா வேணும் உங்க புல்லட் ரயில்.  சாதியை புறம்தள்ளிவிட்டு தமிழர்களாய் ஒன்று சேருங்கள்.சமத்துவ சகோதரத்துவம் ஓங்கி வளரட்டும்.
நவோதயா பள்ளி இந்தி பள்ளி அது வேண்டாம். எங்கள் கார்ப்ரேசன் பள்ளிகளை மேம்படுத்துங்கள் அதுபோதும். இலங்கை போல் தமிழகத்தை கொண்டு வந்து விடுவார்கள் போலிருக்கிறது. அச்சம் ஏற்பட்டிருக்கிறது. சிந்து சமவெளியை விட கீழடியில் தமிழர்களின் நாகரீகம் வரலாறு வீரம் போன்ற சான்றுகள் கிடைத்திருக்கிறது..

உடனடியாக அமர்நாத்ராமகிருஷ்ணன் கீழடிக்குமாற்றப்பட வேண்டும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிர்மலாசீதாராமன் சொன்னார் நுறு சதவிகிதம் அமர்நாத் மாற்றப்படுவார் என்று அதே போல் நடந்திருக்கிறது. சிலைகடத்தல் பிரிவு டிஐஜியாக பொன்மாணிக்கவேல் மாற்றப்படக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே போல் அமர்நாத் மாற்றப்படக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிடவேண்டும். தமிழக அரசு தனியாக தொல்துறை தொடங்கவேண்டும். உலகத்திலேயே தங்கம் கிடைத்தது கீழடியில்தான். தமிழக அரசு மத்திய அரசின் அடிமை அரசாங்கமாக இருக்கிறது. எந்த விதமான வடஇந்தியர்களையும் திணிக்காமல் பல ஆவணங்களை  கோவணங்களாக தொங்கவிட்டிருக்கிறது. கீழடியில் அகழ்வாராய்ச்சி தொடரவில்லையென்றால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன். மத்திய அரசிற்கு கல்தா கொடுப்பேன். கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதில் தவறில்லை. ஆனால் என்ன செய்ய போகிறோம் என்பதை மக்களுக்கு விளக்கவேண்டும். நாம் எதிர்த்து போராடுவது பார்ப்பனர்களைதான். அவரும் பார்ப்பனர். ஓட்டுச்சீட்டு முறைறை கொண்டு வரவேண்டும். எலக்ட்ரானிக்ஸ் பாக்ஸ் வைத்து பிஜேபி தில்லுமுல்லு செய்ய முயற்சிப்பார்கள். ஹெச்.ராஜா சாரணர் இயக்க தலைவராக கொண்டு வந்திருந்தால் அது தமிழகத்திற்கு தலைகுனிவு" என்றார்.