Published:Updated:

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விகடன் வாசகர்களுக்கு, வணக்கம். நான் 'சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி’ சங்கர்.  

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

ஒரு புத்தகம் என்ன செய்யும்?

எங்க கிராமத்துல டி.வி கிடையாது; ரேடியோ கிடையாது; நாளிதழ் வராது. எங்க ஊர் ஜமீன்தார் வாராவாரம் வெளியூர்ல இருந்து 'ஆனந்த விகடன்’ புத்தகம் வாங்கிட்டு வருவார். அவர் படிச்ச பிறகு, எங்களுக்குப் படிக்கத் தருவார்.  நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து 'ஆனந்த விகடன்’ படிக்கும்போதுதான் சினிமாவுல 'இயக்குநர்’னு ஒருத்தர் இருக்காருங்கிறதே எனக்குத் தெரிஞ்சது; அந்தக் கிராமத்தையும் தாண்டி உலகம் இருக்குனு புரிஞ்சது. உலகம் ரொம்பப் பெருசுனு புத்தக வாசிப்பு மூலமாகத்தான் உணர்ந்தோம். ஒரு மனிதனை மாற்றுவது பள்ளியோ, ஆசிரியர்களோ, டியூஷன் சென்டரோ இல்லை. நாம் ஆர்வத்தோடு படிக்கும் புத்தகம்தான். ஒரு புத்தகத்தை நீங்க முழுசா படிச்சு முடிச்சா, உங்களுக்குள் 20 சதவிகிதம் மாற்றம் இருக்கும்னு சொல்லுது ஓர் ஆராய்ச்சி. இன்றைய சூழல்ல பள்ளி மாணவர்கள், பாடப் புத்தகங்கள் தவிர வேறு எதையும் படிக்க மாட்டேங்கிறாங்க. அந்த மனப்பான்மையை பெற்றோர்களும் ஆசிரியர்களும் சேர்ந்து மாத்தணும். இளைஞர்களுக்கு வாசிப்புப் பழக்கத்தைக் கத்துக்கொடுக்கணும். இல்லைன்னா எதிர்காலத்தில் அது பெரிய உளவியல் பிரச்னைகளை உண்டாக்கலாம். அதை தவிர்க்க நாம என்ன பண்ணணும்... சொல்றேன்!

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

ஏன்... ஐ.ஏ.எஸ்.?

'ஏன் ஐ.ஏ.எஸ் படிக்கணும்?’னு சிலர் கேட்கிறாங்க. நாட்டைக் காப்பாத்தவா... பணம் சம்பாதிக்கவா? இந்தக் கேள்விகளுக்குப் பதில் ஒவ்வொருவரின் மனநிலையைச் சார்ந்தது. ஆனா, வேற எந்தத் துறையிலும் இல்லாத ஒரு சிறப்பு சிவில் சர்வீஸஸ் தேர்வுகளில் இருக்கு. அது எல்லா துறைகளைப் பத்தியும் படிப்பது. ஒரு மாசம் விவசாயம் படிப்பாங்க; அடுத்த மாசம் சாலை மேம்பாடு பத்தி தெரிஞ்சுக்குவாங்க. இப்படி... வரலாறு, புவியியல்னு உலகத்தை 360 டிகிரி பார்வையில் தெரிஞ்சுக்கலாம்.  வேற எந்தப் படிப்பிலும் இவ்வளவு வெரைட்டியான  சுவாரஸ்யங்கள் கிடைக்காது. சாதாரண மக்களின் பிரச்னைகளைத் தீர்க்கக்கூடிய மனப்பக்குவம் இந்தப் படிப்பின் மூலம் மேம்படும். 22 வயசுலயே ஐ.ஏ.எஸ் அதிகாரியாகத் தேர்வாகிட்டா, அப்பவே சுமார் 20 ஆயிரம் ஊழியர்களை வேலைவாங்கும் அதிகாரம் கையில வரும். அதுக்குக் காரணம் வாசிப்பு கொடுக்கும் அறிவுமுதிர்ச்சிதான். ஐ.ஏ.எஸ் பொறுப்பு என்பது கிட்டத்தட்ட ஒரு குறுநில மன்னருக்கான பொறுப்பு. ஆனா, 'குறுநில மன்னர்’ங்கிற எண்ணம் மட்டும் நம்மகிட்ட இருக்காது. 'சரி... இவ்வளவு ஆர்வத்தோட ஐ.ஏ.எஸ் தேர்வுக்குப் படிக்கிறோம். ஒருவேளை தேர்வாகலைன்னா என்ன பண்றது?’னு நிறையப் பேர் கேட்கிறாங்க. என்ன பண்ணலாம்... நான் சொல்றேன்!

எப்படி... ஐ.ஏ.எஸ் ஆகிறது?

ஐ.ஏ.எஸ் தேர்வுனாலே எல்லாருக்கும் ஒரு பயம் வந்திடுது. இந்தியாவிலேயே சுலபமான நடைமுறைகளைக் கொண்டது ஐ.ஏ.எஸ் தேர்வுதான். அதேசமயம் இந்தியாவைப் பத்தி முழுசாத் தெரிஞ்சுக்கிட்டு எதிர்கொள்ளவேண்டிய தேர்வும்கூட. உங்க திறமையை மட்டுமே வெச்சு ஐ.ஏ.எஸ் பதவியை அடைய முடியும். முதல் கட்டத் தேர்வுக்கு 50 ரூபாயும், மெயின் தேர்வுக்கு 100 ரூபாயும் செலவு செஞ்சா போதும். அந்த 150 ரூபாயில் உங்க வாழ்க்கையையே மாத்திடலாம். இந்த நம்பிக்கையோடதான் தமிழ்நாடு முழுக்க இருந்து மாணவர்கள் சிவில் சர்வீஸஸ் தேர்வை எழுத ஆர்வமா வர்றாங்க. இதற்கு திறமையும் ஆர்வமும் இருந்தா போதும். ஆனா, தேர்வில் வெற்றிபெற அதுக்கும் மேல சில விஷயங்கள் தேவைப்படும். அதுக்கு நாம என்ன பண்ணணும்... விரிவா சொல்றேன்.

நம்பிக்கை... நம்பிக்கை... நம்பிக்கை!

சிவில் சர்வீஸஸ் தேர்வு எழுதும் சில மாணவர்கள், 'நான் தமிழ் மீடியத்தில் படிச்சேன். எட்டாம் வகுப்பிலேயும், பத்தாம் வகுப்பிலேயும் ஃபெயில் ஆகிட்டேன். காலேஜ் படிக்கும்போது அரியர் வெச்சிருந்தேன். எனக்கு இங்கிலீஷ்ல பேசவே தெரியாது’னு பலவிதமாச் சொல்வாங்க. நானும் எட்டாம் வகுப்பு ஃபெயில்தான். தமிழ் மீடியத்துலதான் படிச்சேன். ஆனா, இன்னைக்கு ஐ.ஏ.எஸ் தேர்வுக்குத் தயாராகிற மாணவர்களுக்குப் பாடம் எடுத்துட்டிருக்கேன். ரொம்ப சிம்பிள்... வாழ்க்கையில் வெற்றியைக் காட்டிலும் தோல்விகள்தான் நம்மளை அதிகம் எதிர்கொள்ளும். அதனால சின்னச் சின்னத் தோல்விகளால் மனசு உடைஞ்சுராதீங்க.  பல மாணவர்கள் பள்ளிப் படிப்பில், கல்லூரிப் படிப்பில் தோல்வி அடைஞ்ச பிறகுதான், அவங்க இயல்பைக் காட்டிலும் அதிதீவிரமாச் செயல்பட்டு வெற்றிக்கோட்டைத் தொட்டிருக்காங்க. அதனால எந்த நேரத்திலும் உங்க வாழ்க்கையில் ஒரு திருப்பம் உண்டாகலாம். நீங்க முயற்சியை மட்டும் தவறவிட்டுரக் கூடாது. அதுவும் சிவில் சர்வீஸஸ் தேர்வுகளுக்கு  முயற்சிதான் முக்கியம். முடியும்கிற நம்பிக்கையை மட்டும் மனசுல பதிச்சுக்கணும். அதை எப்படி செயல்படுத்துறது? அதுக்கும் பல டிப்ஸ் இருக்கே!  

இளைஞர்களுக்கு ஒரு கோரிக்கை!

அப்போ எல்லாம் பள்ளிக்குப் போகும்போது சாப்பாட்டைத் தூக்குச் சட்டியில் எடுத்துக்கிட்டு, அரைக்கால் டிராயர் போட்டுக்கிட்டு, மணல்ல விழுந்து எந்திருச்சு விளையாடி வாழ்க்கையைக் கொண்டாடிட்டே பாடம் படிச்சோம்.  ஆனா, இன்னைக்கு ஒரு குழந்தை நடக்க, பேசப் பழகினதுமே ப்ளே ஸ்கூல்ல புடிச்சுப் போட்டுறாங்க. எங்க ஊர்ல வீட்டுக்கே வந்து நூல் மில்லுக்கு ஆட்களைப் பிடிச்சுட்டுப் போவாங்க. அந்த மாதிரி பிள்ளைகளை பள்ளிக்குப் பிடிச்சுட்டுப் போறாங்களேனு கவலையா இருக்கும். பள்ளி, கல்லூரி, கல்லூரி இறுதியாண்டில் வேலை... இப்படியே வாழ்க்கை ஓடிருது. நடுவுல சின்னத் தடுமாற்றம் வந்தாலும் மனம் உடைஞ்சு ஏதோ வாழ்க்கையையே இழந்துட்டதுபோல தவறான முடிவு எடுக்கிறாங்க. காரின் ஜன்னலுக்கு வெளியே இருந்துதான் இந்த உலகத்தைப் பார்க்கிறாங்க. காரை விட்டு கீழே இறங்கினால் தடுமாறிடுறாங்க. சுயமா முடிவெடுக்கும் நம்பிக்கைகூட அவங்ககிட்ட இல்லை. 'நமக்கு என்ன தேவை?’னு அவங்களுக்கே தெரியலை. அந்தச் சிக்கலை பெரியவங்கதான் தீர்க்கணும். அதுக்கு இளைய சமுதாயமும் தன்னை ஒப்புக்கொடுக்கணும்.

நம்மை நாமே வடிவமைச்சுக்கிறது சுலபம்தான். அந்த ஃபார்முலாவில் எனக்குத் தெரிஞ்ச பகுதிகளைச் சொல்றேன்.

08-01-15 முதல் 14-01-15 வரை 044-66802911 என்ற எண்ணுக்குக் கூப்பிடுங்க. நல்லது பல பேசலாம்!  

       அன்புடன்,

சங்கர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு