Published:Updated:

கணவன் சம்பளத்தில் 20% மனைவிக்கு...தயாராகிறது மசோதா!

கணவன் சம்பளத்தில் 20% மனைவிக்கு...தயாராகிறது மசோதா!
கணவன் சம்பளத்தில் 20% மனைவிக்கு...தயாராகிறது மசோதா!
கணவன் சம்பளத்தில் 20% மனைவிக்கு...தயாராகிறது மசோதா!

புதுடெல்லி: வீட்டில் அன்றாட பணிகளை செய்யும் மனைவிகளுக்கு கணவன், மாதாந்திர சம்பளம் வழங்குவதற்கான மசோதா தயாரிக்கப்பட்டு வருவதாக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கிருஷ்ணா திராத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் இன்று இதனை தெரிவித்த அவர்,"மகளிர் முன்னேற்றத்திற்குரிய வகையில் மத்திய அரசின் நடவடிக்கைகள் உள்ளது.

வீட்டில் அன்றாட பணிகளை செய்யும் மனைவிகளுக்கு மாதாந்திர சம்பளத்தை கணவன்மார்கள் வழங்கும் மசோதா தயாரிக்கப்பட்டு வருகிறது.விரைவில்  மத்திய அமைச்சரவையில் இம்மசோ‌தா தாக்கல் செய்யப்பட உள்ளது.

##~~##
மகளிருக்கு அதிகாரம் அளிக்க வகை செய்யும் மத்திய அரசின் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று.ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு எவ்வள்வு சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்பதையும் அரசே நிர்ணயிக்கவும் உள்ளது.
இந்த மசோதா தயாராகிவிட்டால்,அது நாடாளுமன்றத்தில் 6 மாத காலத்திற்குள் தாக்கல் ஆகிவிடும் ”என்று மேலும் கூறினார்.
சம்பளத்தில் 10 - 20 %
இதனிடையே இந்த மசோதா நிறைவேறினால், கணவன்மார்கள் தங்களது சம்பளத்தில் 10 முதல் 20 சதவீத தொகையை,மனைவியின் மாதம்தோறும் வங்கி கணக்கில் செலுத்த வேண்டியது வரும் என்றார்.