Published:Updated:

காரைக்குடி மாநகராட்சி ஆவது எப்போது?

காரைக்குடி மாநகராட்சி ஆவது எப்போது?
காரைக்குடி மாநகராட்சி ஆவது எப்போது?

காரைக்குடி மாநகராட்சி ஆவது எப்போது?

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தற்போது நகராட்சியாக இருந்து வருகிறது. மாவட்டத் தலைநகர் சிவகங்கையாக இருந்தாலும் காரைக்குடியில்தான் எல்லாவகையான வசதிகளும் அமைந்துள்ளன. நிர்வாக வசதிக்காகவும் வருவாயைப் பெருக்கவும் மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டி காரைக்குடி நகராட்சியில் 28.05.2015 ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு நகராட்சிகளின் நிர்வாக இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது, தற்போது இருக்கும் காரைக்குடி எல்லையை விரிவாக்கம் செய்தால் மட்டுமே மாநகராட்சியாக்க முடியும். அதற்காகத்தான் சங்கராபுரம் கோவிலூர் கோட்டையூர் இலுப்பகுடி ஆகிய ஊராட்சிகளை ஒன்றினைத்து எல்லையை விரிவுபடுத்த திட்டமிட்டார்கள். மாநகராட்சியாக அறிவிக்கப்படாமலேயே கிடப்பில் கிடக்கிறது.

காரைக்குடி  இது குறித்து சமூக ஆர்வலரான ஆதிஜெகநாதனிடம் பேசும்போது, “காரைக்குடி மாநகராட்சி ஆவதற்கான அனைத்துத் தகுதிகளையும் பெற்றிருக்கிறது. காரைக்குடி நகராட்சிக்குள் இருக்க வேண்டிய அரசு மருத்துவமனை கால்நடை மருத்துவமனை  அரசுப் போக்குவரத்துக்கழக அலுவலகம் ஆவின்  போன்ற அலுவலகங்கள் சங்கராபுரம் கிராமப் பஞ்சாயத்தில் அமைந்துள்ளது. அதுபோக வட்டாரபோக்குவரத்துக்கான அலுவலகம் பத்திரப்பதிவுத் துறை அலுவலகமும் இங்குதான் வரவிருக்கிறது. மிகப்பெரிய வருவாயைக் காரைக்குடி நகராட்சி இழந்திருக்கிறது.

அழகப்பா பல்கலைக்கழகம் மத்திய அரசின் சிக்ரி நிறுவனம் தனியார் கல்லூரிகள் பள்ளிகள் என இங்கு இருப்பதால் கிராமப்புற மக்கள் காரைக்குடியில் அதிகமாக குடியேறிவருகிறார்கள். எனவே, மக்கள் தொகை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதற்கேற்ற வசதிகளைச் செய்து கொடுப்பதற்கு சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கெல்லாம் மாநகராட்சியாக ஆக்கினால் மட்டுமே ஒரு விமோசனம் பிறக்கும். காரணம் அரசாங்கம் ஒதுக்கீடு செய்யும் நிதி கூடுதலாகக் கிடைக்கும். மாநகராட்சிக்கும் வருவாய் அதிகரிக்கும். எனவேதான், நாங்கள் காரைக்குடியை மாநகராட்சியாக மாற்றி அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடிக்குக் கோரிக்கை வைத்துள்ளோம்.. காரைக்குடியை மாநகராட்சியாக்குவது என்பது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவு. எனவே, முதல்வர் எடப்பாடி ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றுவார் என்றுதான் நம்புகிறோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு