Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பூமியில்தான் தண்ணீர் பஞ்சம்... இந்த கிரகத்தில் நிறைய இருக்கிறதாம்..!

புதன் தண்ணீர்

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா? இருந்தால் அங்கே போய் குடியேறிவிடலாம் என்று பல ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன. போய்தான் ஆக வேண்டும்” என்கிறார் ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ். இந்தச் சூழலில், புதன் (மெர்க்குரி) கோளில் தண்ணீர் பனியாக உறைந்து கிடப்பதாக சொல்கிறார்கள் பிரவுன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கோள் புதன்; மிகவெப்பமான கோளும்கூட. புதன் கோளில் உள்ள பள்ளங்களில் இந்தப் பனிக்கட்டிகள் கிடப்பதாக சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். சூரியனுக்கு அருகிலிருக்கும் கோள்களிலும் பனிக்கட்டிகள் அல்லது தண்ணீர் இருக்கலாம் என்று முன்பு நம்பப்பட்டு வந்த ஊகமே இந்த ஆராய்ச்சிக்கான அடிப்படையாக அமைந்திருக்கிறது. 1990களில், பயன்படுத்தப்பட்ட ரேடார் தொலைநோக்கிகள், புதன் கோளின் துருவப்பகுதிகளுக்கு அருகிலிருக்கும் சில பள்ளங்களில் அதிப்படியான எதிரொளிப்பு நிகழ்வதை உறுதிச் செய்திருக்கின்றன. புதன் கோள் தன் அச்சிலிருந்து சிறிதளவு சாய்ந்தாலும், சூரியனிலிருந்து வரும் ஒளிக்கதிர்களிருந்து மிகக்குறைந்த அளவிலோ அல்லது முற்றிலுமாகவோ மறைக்கப்படுவதால் ஏற்படும் குறைந்த வெப்பநிலையே இந்த பனிக்கட்டிகளின் தோற்றத்துக்கான காரணமாக கருதப்படுகிறது.

முனைவர் Ariel deutsch என்பவர் நாசாவுடன் (Goddard Space Flight Center) இணைந்து பணியாற்றியபோதுதான் இந்த ஆராய்ச்சிக்கான தகவல்கள்  செயற்கைக்கோள் மூலம் பெறப்பட்டது. 2011 – 2015 வரை செயல்பட்ட இந்த செயற்கைக்கோள், தயாரித்த வரைபடத்தின் மூலம் புதன் கோளில் எதிரொளிப்பு மிகுந்த மற்ற பகுதிகளும் கண்டறியப்பட்டது.

இந்தத் தகவல்கள் மூலம், பனி உறைந்த மூன்று பெரிய பள்ளங்களை கண்டறிந்தனர். இவற்றின் பரப்பளவு சுமார் 3400 சதுர கிலோமீட்டர்கள். இது மட்டுமல்லாமல் இதோடு 4 சிறிய பள்ளங்களும் இருந்தனவாம். சிறிய பள்ளங்கள் என்றால் அவற்றின் விட்டமே சுமார் 5 கிலோ மீட்டர்கள் 

இதுகுறித்து கூறும் ஆராய்ச்சியாளர்கள்,

”பெரிய பள்ளங்கள் மட்டுமல்லாமல் ஆதாரபூர்வமாக கண்டறியப்பட்டுள்ள சிறிய பள்ளங்களில் உள்ள பனிப்படிவுகளை ஒன்று கூட்டி ஆராய்வதன் மூலம்  இதுவரை கண்டறியப்படாத சில உண்மைகளைக் கண்டறியலாம் என்கிறார் டாய்ட்ச். அவருடன் ஆராய்ச்சியாளராக பணியாற்றிய ஜிம்மின் கூற்றுப்படி, இந்த ஆராய்ச்சி தண்ணீர் தேவைக்கான புதிய பாதையை நமக்கு காட்டியுள்ளது. நாம் நினைப்பதைவிட அங்கே ஏராளமான தண்ணீர் இருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

புதன் கோளின் மீதான இந்த ஆராய்ச்சி, ஆராய்ச்சியாளர்களின் பார்வையை நிலவில் நீர் இருப்பதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியை நோக்கி மீண்டும் திருப்பியுள்ளது. நிலவிலும் இதேபோன்று இருக்கும் பனிப்பாறைகளைக் கண்டறியும் பட்சத்தில், புதன் கோளைப் போன்று இரண்டு மடங்கு தண்ணீர் நிலவில் இருக்கலாம் என்பது அறிவியலார்களின் கருத்து. 

ஆனால், புதன் கோளில் தண்ணீர் எப்படி உருவாகிறது என்பதுகுறித்து தீர்க்கமான முடிவுகள் இன்னும் எட்டப்படவில்லை. சிலர், புதன்கோளில் சிறுகோள்களும் , வால்மீன்களும் இந்தத் தண்ணீரை கொண்டு வந்திருக்கலாம் என்றும், சிலர் சூரிய புயலிலிருந்து வரும் ஹைட்ரஜன் அணுக்கள் ஆக்ஸிஜன் அணுக்களோடு ஒன்றுசேர்ந்து நீர் மூலக்கூறை உருவாக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

புதன் கோளில் இருக்கும் தண்ணீர் குறித்தும், அது உறைநிலையில் இருப்பதன் காரணம் குறித்தும் நீண்டுகொண்டிருக்கும் ஆராய்ச்சிகள் எதிர்காலத்தில் நீர் ஆதாரத்துக்கான புதிய வழியைக் காட்டியுள்ளது என்று நம்பலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement