Published:Updated:

பென்னிகுயிக் சிலைக்கு மரியாதை செலுத்தாத பன்னீர்செல்வம் - விவசாயிகள் அதிருப்தி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பென்னிகுயிக் சிலைக்கு மரியாதை செலுத்தாத பன்னீர்செல்வம் -  விவசாயிகள் அதிருப்தி!
பென்னிகுயிக் சிலைக்கு மரியாதை செலுத்தாத பன்னீர்செல்வம் - விவசாயிகள் அதிருப்தி!

பென்னிகுயிக் சிலைக்கு மரியாதை செலுத்தாத பன்னீர்செல்வம் - விவசாயிகள் அதிருப்தி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் மிக முக்கிய குடிநீர் ஆதாரம் முல்லைப்பெரியார் அணை. இதனைக் கட்டிய ஆங்கிலேய பொறியாளரான கர்னல் ஜான் பென்னிகுயிக்கை மரியாதை செலுத்தும் விதமாக ஓர் மணிமண்டம் அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் பல வருடக்கோரிக்கை இருந்துவந்தது. அதனை நிறைவேற்றிய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா லோயர்கேம்பில் ஓர் அழகிய மணிமண்டபம் கட்டினார். 2013-ம் ஆண்டு திறக்கப்பட்ட அந்த மணிமண்டபத்தில், பென்னிகுயிக்கின் வெங்கலச்சிலை உட்பட அணை தொடர்பான புகைப்படத் தொகுப்பும் அங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகளின் முதல் போக சாகுபடிக்காகவும், ஐந்து மாவட்ட மக்களின் தண்ணீர் தேவைக்காகவும் இன்று முல்லைப்பெரியார் அணையில் இருந்து 300 கன அடி நீர் திறந்துவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த தண்ணீர் திறப்பிற்கு வருகை தந்திருந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அணைக்கு செல்லும் முன் லோயர்கேம்பில் உள்ள பென்னிகுயிக் மணி மண்டபத்தில் உள்ள கர்னல் பென்னிகுயிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேராக அணைக்கு சென்ற பன்னீர்செல்வம், அணை சட்டரை திறந்துவைத்துவிட்டு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு கூட பதிலளிக்காமல் அவசரமாக புறப்பட்டார். சரி போகும் வழியிலாவது பென்னிகுயிக் சிலைக்கு மரியாதை செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது.

நேராக தேனி வந்த பன்னீர்செல்வம், அடுத்த மாதம் நடைபெற இருக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் தீவிரம் காட்டினார். இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் அதிருப்தியடைந்தனர். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு