Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சேவாக்குக்கு சச்சின் பரிசளித்த `7 சீரிஸ்' காரில் என்ன ஸ்பெஷல்?

இந்திய அணியின் முன்னாள் ஓபனிங் பேட்ஸ்மேன் வீரேந்தர் சேவாக், அதிரடி ஆட்டத்துக்குப் பெயர்பெற்றவர். கிரிக்கெட் மைதானங்களில் காட்டிய அதிரடியை, தற்போது ட்விட்டரில் காட்டிக்கொண்டிருக்கிறார். லேட்டஸ்ட்டாக, இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கும் பி.எம்.டபிள்யூ நிறுவனத்துக்கும் ட்விட்டரில் (`Thank you @sachin_rt paaji and @bmwindia Grateful for this!') தன் நன்றியைத் தெரிவித்திருந்தார்.

 

bmw7 series

2003-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டி முதல் சேவாக் ஓய்வுபெறும் காலம் வரை, சேவாக் - டெண்டுல்கர் இருவரும்தான் இந்திய அணியின் தொடக்க வீரர்களாகக் களமிறங்கனர். இருவரும் களத்துக்கு வெளியேயும் சிறந்த நட்பைக்கொண்டிருக்கின்றனர். இதன் வெளிப்பாடாக, தற்போது பி.எம்.டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக இருக்கும் சச்சின், புதிதாக `7 சீரிஸ்' காரை சேவாக்குக்குப் பரிசளித்ததே, இந்த ட்விட்டுக்கான காரணம். இதற்குப் பதில் சொல்லும்விதமாக, (Glad you bought the car of your dreams!! They have been my favourite cars for a number of years. Sheer driving pleasure!! #BMW) என சச்சினும் ட்விட்டியுள்ளார். இதற்கு `தளபதி' ரஜினி பாணியில் `நட்புனா என்னன்னு தெரியுமா... சச்சின்னா என்னன்னு தெரியுமா?' என உருகியுள்ளார்.

`7 சீரிஸ்' காரில் அப்படி என்ன ஸ்பெஷல்?

பி.எம்.டபிள்யூவின் ப்ரீமியம் லக்ஸூரி ஸ்போர்ட்ஸ் செடான் காரான `7 சீரிஸ்', அந்த நிறுவனத்தின் (Modular CLAR - Cluster Architecture) பிரிவில் தயாரிக்கப்படுகிறது. முந்தைய தலைமுறை மாடலைவிட ஷார்ப்பான டிசைனையும், 100 கிலோ குறைவான எடையையும்கொண்டிருக்கும் 7 சீரிஸ், அதிகப்படியான சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கிறது. Gesture Control, ரிமோட் பார்க் அசிஸ்ட், 3D கிராஃபிக்ஸ் Interface, Heads Up Display (HUD), 16 ஸ்பீக்கர் - 1400 வாட் Bowers & Wilkins ஆடியோ சிஸ்டம், லேசர் ஹெட்லைட், மசாஜ் மற்றும் வென்டிலேஷன் வசதியைக்கொண்டிருக்கும் பின்பக்க இருக்கை, வொயர்லெஸ் சார்ஜிங், Sky Lounge ஆகியவற்றை, இதற்கான உதாரணங்களாகச் சொல்லலாம்.

சேவாக்

இதில் தொழில்நுட்பத்தின் உச்சமாக, காருடன் வழங்கப்பட்டிருக்கும் Display Key Fob-ல் இருக்கும் டச் கமாண்ட் சிஸ்டத்தைப் பயன்படுத்தி, காருக்குள் நுழையாமலேயே பார்க் செய்துகொள்ளும் வசதி இருப்பது பெரிய ப்ளஸ். 3.0 லிட்டர், In-Line 6 சிலிண்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட 730Ld மாடலின் சென்னை ஆன்-ரோடு விலை, 1.5 கோடியைத் தொடுகிறது. 265bhp பவர் மற்றும் 62kgm டார்க்கை வெளிப்படுத்தும் இந்த கார், 0 - 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6.2 விநாடியிலேயே எட்டிவிடக்கூடிய திறனைக்கொண்டிருப்பதுடன், அதிகபட்சமாக 250 கிலோமீட்டர் வரை செல்கிறது. 

இதற்கு பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் ரியாக்‌ஷன் என்ன?

(Welcome to the world of Sheer Driving Pleasure @VirenderSehwag! Have a good ride) என பி.எம்.டபிள்யூ இந்தியா நிறுவனம், சேவாக்கை தன் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் ஒருவராக மாறியதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. முன்னதாக, சச்சின் டெண்டுல்கரும் `7 சீரிஸ்' காரை வைத்திருக்கிறார் என்பது கொசுறு தகவல். இந்த ப்ரீமியம் லக்ஸூரி ஸ்போர்ட்ஸ் செடான் காரின் டாப் வேரியன்ட்டான M760 Li காரின் சென்னை ஆன்ரோடு விலை 2.8 கோடி ரூபாயைத் தொடுகிறது!

சச்சின்

இதில் முன்னர் சொன்ன வசதிகளுடன், 6.6 லிட்டர் ட்வின் டர்போ 12 சிலிண்டர் V12 பெட்ரோல் இன்ஜின் - xDrive ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் அமைப்பைக்கொண்டிருக்கிறது. 4 வீல்களுக்கும், இந்த 12 சிலிண்டர் இன்ஜினின் 601bhp பவர் மற்றும் 80kgm டார்க் சரிசமமாகப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. எனவே, 0 - 100 கிலோமீட்டர் வேகத்தை, 3.7 விநாடியிலேயே `ஜஸ்ட் லைக் தட்' கடந்துவிடுகிறது. லக்ஸூரி கார் என்பதால், கேபினிலும் லெதர் - அலுமினியம் - மர வேலைப்பாடுகள் நீக்கமற நிறைந்திருக்கின்றன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement