Published:Updated:

’கலைஞர் கருணாநிதியின் பெயரைச் சேருங்கள்!’ - சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழாவில் பிரபு வைத்த கோரிக்கை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
’கலைஞர் கருணாநிதியின் பெயரைச் சேருங்கள்!’ - சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழாவில் பிரபு வைத்த கோரிக்கை
’கலைஞர் கருணாநிதியின் பெயரைச் சேருங்கள்!’ - சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழாவில் பிரபு வைத்த கோரிக்கை

’கலைஞர் கருணாநிதியின் பெயரைச் சேருங்கள்!’ - சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழாவில் பிரபு வைத்த கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 90 வது பிறந்தநாளையொட்டி சென்னை அடையாறில் அமைக்கப்பட்டுள்ள அவரது மணி மண்டபத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

’கலைஞர் கருணாநிதியின் பெயரைச் சேருங்கள்!’ - சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழாவில் பிரபு வைத்த கோரிக்கை

இவ்விழாவில்  நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் அமைச்சர்கள், தமிழ் திரையுலகினர், நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர் உள்ளிட்ட ஏராளமானோர் சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழாவில் பங்கேற்றனர். விழா தொடக்கத்தில் மேடையில் அமர்ந்திருந்த அமைச்சர் ஜெயக்குமார், ரஜினியையும், கமலையும் மேடைக்கு அழைத்தார்.

’கலைஞர் கருணாநிதியின் பெயரைச் சேருங்கள்!’ - சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழாவில் பிரபு வைத்த கோரிக்கை

விழாவில் பேசிய நடிகர் பிரபு ‘சிவாஜிக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கனவு நிறைவேறியுள்ளது. சிவாஜி கணேசன் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். கருணாநிதி திறந்துவைத்த சிவாஜி சிலை மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. எனவே சிவாஜியின் மணிமண்டபத்தில் கலைஞர் கருணாநிதியின் பெயரை ஒரு ஓரத்திலாவது வையுங்கள் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்’ என்று குறிப்பிட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு