Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாளை அறிமுகமாகிறது, ஸ்கோடாவின் 7 சீட்டர் எஸ்யூவியான கோடியாக்!

 

Chennai: 

தனது பெர்ஃபாமென்ஸ் செடானான ஆக்டேவியா RS காரை, கடந்த மாதம் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் களமிறக்கியது ஸ்கோடா. ஆனால், தற்போது பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், டொயோட்டா பார்ச்சூனர் - ஃபோர்டு எண்டேவர் - ஃபோக்ஸ்வாகன் டிகுவான் ஆகிய எஸ்யூவிகளுக்குப் போட்டியாக, Alaskan கரடியைப் பின்பற்றி பெயரிடப்பட்டிருக்கும் கோடியாக் எனும் லக்ஸூரி  எஸ்யூவியை, இந்தியாவில் நாளை அறிமுகப்படுத்த உள்ளது ஸ்கோடா.

 

 

இது ஸ்கோடாவின் முதல் 7 சீட் எஸ்யூவியாகவும், விலை அதிகமான காராகவும் பொசிஷன் செய்யப்பட்டிருக்கிறது. எனவே, சூப்பர்ப் செடானால் தயாரிக்கப்படும் MQB பிளாட்ஃபார்மில்தான் கோடியாக் எஸ்யூவியும் தயாரிக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, கோடியாக் மோனோகாக் சேஸியைக் கொண்டிருந்தாலும், எஸ்யூவிகளுக்கு ஏற்றபடியான நீளம் மற்றும் உயரத்துக்கு ஏற்ப MQB பிளாட்ஃபார்ம் இங்கே மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

 


இதை உறுதிப்படுத்தும் விதமாகவே, இந்த எஸ்யூவியின் 2700மி.மீ வீல்பேஸ் - 190மி.மீ கிரவுண்ட் கிளியரன்ஸ் - 300மி.மீ ஆழத்தில் செல்லக்கூடிய திறன் அமைந்திருக்கின்றது. ஆல் வீல் டிரைவ் அமைப்பும் இருப்பதால், கோடியாக் எஸ்யூவியில் கொஞ்சம் ஆஃப் ரோடிங்கும் செய்யலாம். இதில் 143bhp பவர் - 34kgm டார்க் - 16.25kpl அராய் மைலேஜை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் TDI டீசல் இன்ஜின் - 7 ஸ்பீடு DSG கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது.

 

 

ஆனால், லேடர் ஃப்ரேம் எஸ்யூவிகளைவிட இதன்  எடை குறைவு (1.8 டன்) என்பதால், இன்ஜின் பவர் ஒரு பிரச்னையாக இருக்காது என்றே தெரிகிறது. LED ஹெட்லைட் மற்றும் டெயில் லைட், Hands-Free பார்க்கிங் அசிஸ்ட், ஆப்பிள் கார் பிளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ உடனான 8 இன்ச் Connect இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், காரின் 180 டிகிரி View வழங்கும் 4 கேமராக்கள் என கோடியாக் எஸ்யூவியில் அதிக சிறப்பம்சங்களை வாரி இறைத்திருக்கிறது ஸ்கோடா. 

 


25 - 30 லட்ச ரூபாயில் (உத்தேச எக்ஸ் ஷோரூம் விலை) வெளிவர உள்ள கோடியாக், பின்னாளில் சந்தை தேவைகளுக்கு ஏற்ப, 177bhp பவரை வெளிப்படுத்தும்  2.0 லிட்டர் TDI டீசல் இன்ஜின் மற்றும் 180bhp பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் TSI பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களுடனும் வெளிவருவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. சர்வதேச Euro NCAP நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில், 5 ஸ்டார் ரேட்டிங்கை கோடியாக் எஸ்யூவி பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement