சிங்கிள்ஸ் சாபம் உங்களை சும்மா விடாதுய்யா! #VikatanFun

ஃபேஸ்புக்கில் தினமும் சிங்கிள்களை ப்ளேபாய் மீம்களில் டேக் செய்து இம்சை கொடுப்பவர்களை, இந்த ஆர்டிக்களில் டேக் செய்யவும். ப்ளேபாய் போஸ்டை டேக் செய்பவர்களே... நீங்கள் நினைத்திருப்பதுபோல சிங்கிள்களின் உலகம் மேரி, மலர், செலின்களால் உருவானதல்ல, ஒளிஞ்சுபிடிச்சு விளையாட்டு, கிரிக்கெட், வடிவேல் காமெடிகளால் உருவானது.  #Singlesarmy

"Commited and Playboy are just words. But, Single is an emotion."

சிங்கிள்

நாட்டில் நிகழும் பல பிரச்னைகளுக்கு மத்தியிலும், தினமும் ஃபேஸ்புக்கில் ஏதாவது ஒரு வடக்குப்பட்டி ராமசாமி; “Tag your friend who is playboy” மீமை யாராவது ஒரு சிங்கிளின்  பெயரில் டேக் செய்து தொலைப்பான். ஆனால், நிஜத்தில் அந்த சிங்கிள்கள் மருத்துவ முத்தம், இன்ஜினீயரிங் முத்தம் எனக் கண்டுபிடிப்புகள் நடந்து கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில்கூட "பிப்ரவரி14" என்ற நாளையே  காலண்டரிலிருந்து தகுதி நீக்கம் செய்த அட்டக்கத்திகளாகத்தான் இருப்பர். ஃபேஸ்புக், வாட்ஸ்அப், டிவிட்டர், டெலிகிராம் ஆரம்பித்து சமீபத்திய சரஹா வரை, நட்பை, க்ரஷை பகிர்ந்துகொள்ள பற்பல ஆப்கள் வந்த போதும் அவர்களுக்குக் கிடைக்கும் க்ரஷ், பகிர்தல் எல்லாம் 'கேன்டி கிரஷ்'ஷாக மட்டும் தானிருக்கும். எல்லா சிங்கிள் சிங்கங்களுக்கும் பொதுவான ப்ளாஷ்பேக், `ஆட்டோகிராப்' சேரனின் ஆட்டோகிராப் அளவிற்கு இல்லாவிட்டாலும் சற்றே மென் சோகமானது.

(முன் குறிப்பு: கமிடட் மற்றும் பிளேபாய் பீபிள்களே... இந்த ப்ளாஷ்பேக் உங்களுக்கானதல்ல. அதேசமயம் சிங்கிள்களே, நீங்கள் ஏன் சிங்கிளாக இருக்கிறீர்கள் என்பதும் உங்களுக்கு இதன் மூலம் தெரியவரலாம்.) கொஞ்சம் சைக்கிள் எடுத்து ரிவர்ஸ் பெடல் போடுவோமா...

சிறு வயது : (எல்.கே.ஜி - அஞ்சாப்பு ) 

`Co-education' என்றால் என்னவென்றே தெரியாத வயதில், `Co-education' ல் படித்திருப்பீகள் (தெரிஞ்சப்ப படிச்சிருந்தா மட்டும்). கிட்ஸாக இருந்த காலத்தில் உங்களின் எண்ணம் முழுவதும் `எப்படா ஸ்கூல் பெல் அடிப்பாங்க, வீட்டுக்குப் போய் `பாப்பாய்', `டாம் அண்ட் ஜெர்ரி', `ஸ்கூபி டூ', `பவர் ரேஞ்சர்ஸ்' பார்க்கலாம்', என்பதாகத்தான் இருந்திருக்கும். அதையும் தாண்டி உங்கள் ஏரியாவிலிருக்கும் கிளாஸ்மேட்டிடம் நீங்கள் ஹீரோவாகும் எண்ணத்தில் தம்மாத்தூண்டு பென்சிலைக் கடன் கேட்க, அந்தச் சிறுமியோ `பாகுபலி' சிவகாமியாக மாறி உங்கள் காதல் பலூனில் காம்பஸ் ஏற்றியிருப்பார். சரிதானே?!

பள்ளிக் காலம்: ( ஆறாப்பு - பன்னிரண்டாப்பு  )

கருடபுராணத்தில் இருக்கும் அத்தனை தண்டனையைவிட கொடுமையானது ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிப்பது. ஏனெனில்,  உங்கள் பள்ளி வாழ்க்கை முழுவதும் டிபன் பாக்ஸ் வேட்டை, ஹேண்ட் கிரிக்கெட், முதுகு பஞ்சர் என ஆண்கள் சூழ் உலகாகத்தான் இருந்திருக்கும். டியூசன்களுக்கு சைட் அடிப்பதற்காக மட்டுமே சென்றிருந்தாலும்கூட அங்கும் ஃபர்ஸ்ட் ரேங்க் பக்கிகள் களமாட, நாம் Substitute-க்கு கூட அன்பிட் ஆகியிருப்போம். அட போங்கய்யா...

கல்லூரிக் காலம் :

காலேஜ் போக வேண்டுமென்று ஆசை வர மிக முக்கியக் காரணமே, எல்லாப் படங்களிலும் ஹீரோவுக்குக் கல்லூரியில்தான் காதலி கிடைத்திருப்பார் என்பதே. ( எந்தப் படத்திலுமே அசைன்மென்ட், இன்டர்னல்ஸ், வைவா எனும் கல்லூரியின் உண்மை முகத்தைக் காட்டியிருக்கமாட்டார்கள். ) ஆனால்,  கடைசி பெஞ்சில் உட்கார்வதற்கான பத்துப் பொருத்தமும் பொருந்திய உங்களைப் போலவே நான்கு சங்கி மங்கிகள் உங்களுக்கு நண்பர்களாகக் கிடைத்திருப்பார்கள். அவர்கள் உங்கள் வாழ்க்கையில் இருபெரும் துயரச் சம்பவங்களை அரங்கேற்றியிருப்பார்கள். 

சிங்கிள்

சம்பவம்1: செகண்ட் இயரில் உங்கள் ஜூனியர் உங்களை `ஜில்லுனு ஒரு காதல்' சூர்யாவாக பார்த்த செய்தியை அவர்களிடம் `சூர்யா ஸ்மைலோ'டு நீங்கள் கூற, அவர்கள் `கோட்டா சீனிவாசராவ் ஸ்மைலி'ல், "உன் அழகுக்கு அந்தப் பொண்ணு கொஞ்சம் கம்மி தான் மச்சி" எனக் கொளுத்திப்போட்டிருப்பார்கள்.( நானு… அழகு… நீ பாத்த...)

சம்பவம்2: கிளாஸ் ரூமின் பின்பக்க சுவரில் ஒட்டியிருந்த டைம் டேபிளை பார்ப்பதற்காகத் திரும்பிய பெண்ணை, “மச்சான், அந்தப் பொண்ணு உன்னதாண்டா பாக்குது” எனக் கொளுத்திப்போட்டு, "நாங்க அந்தப் பொண்ணையும் உன்னையும் சேத்து வைக்குறோம்டா" என அவர்கள் சசிகுமாராக போட்ட பிளான் எக்ஸிகியூஷனில் பெயிலியராகி, உங்களை `இதயம்' முரளியாக்கியிருக்கும். இதயமே... என் இதயமே...

வேலைபார்க்கும் இடத்திலாவது... நிற்க. அங்கு உங்களைத் தவிர அனைவருமே கமிட்டட்.  ஆகவே, நீங்கள் உங்களின் அதே நான்கு நண்பர்களுடன் ரூம்மேட்டாகி, உங்களுக்குள் ஒரு வாட்ஸப் குரூப் கிரியேட் செய்து, `கரடி ஜோக்' பேசி சிரித்துக்கொண்டிருப்பீர்கள். எல்லோரும் கடலை போடும்போது நம்மால் கடலை பொக்குகூட போட முடியலையே என்கிற கடுப்பில் `சிங்கிள்தான் கொமாரு கெத்து' என டாட் வைத்திருப்பீர்கள். 

பின் குறிப்பு: இப்படியாக சிங்கிள்களின் தவ வாழ்வில் நீங்கள்  வந்து ப்ளேபாய் மீம் போட்டு, டேக் செய்து `தர்மயுத்தம்' நடத்துவது எவ்விதத்தில் நியாயமாகும்  அன்பார்ந்த மக்களே... இனிமேலாவது சிங்கிள்களை ப்ளேபாய் மீம்களில் டேக் செய்து, அவர்களின் சாபத்திற்கு ஆளாகாதீர்கள். ஏனெனில், "Commited and Play boy are just words. But, Single is an emotion."

Do you like the story?

Please Appreciate the Author by clapping!