4.15 லட்சத்துக்குக் களமிறங்கியது, 2017 மாருதி சுஸூகி செலெரியோ! #MarutiSuzuki #Celerio | Maruti Suzuki launches the FaceLifted Celerio at 4.15 Lakhs

வெளியிடப்பட்ட நேரம்: 07:34 (06/10/2017)

கடைசி தொடர்பு:07:43 (06/10/2017)

4.15 லட்சத்துக்குக் களமிறங்கியது, 2017 மாருதி சுஸூகி செலெரியோ! #MarutiSuzuki #Celerio

 

ரெனோ க்விட் 1.0 - டாடா டியாகோ - ஹூண்டாய் இயான் ஆகிய கார்களுக்குப் போட்டியாக, பேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட செலெரியோ ஹேட்ச்பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது, மாருதி சுஸூகி. மொத்தம் 6 கலர்கள் - 12 வேரியன்ட்களில் கிடைக்கும் இந்த காரின் விலை, 4.15 - 5.34 லட்சம் (டெல்லி எக்ஸ் ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை அடிப்படையாகக்கொண்டு, க்விட் க்ளைம்பர் காருக்குப் போட்டியாக, செலெரியோ X எனும் க்ராஸ் ஹேட்ச்பேக் விரைவில் வெளிவர உள்ளது.  

 

மாருதி சுஸூகி


இது, பேஸ்லிஃப்ட் மாடல் என்பதைப் பறைசாற்றும் விதமாக, க்ரோம் பட்டையுடன் கூடிய புதிய க்ரில் - புதிய தோற்றத்தில் பனி விளக்குகள் - அகலமான ஏர் டேம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் முன்பக்க பம்பர், முன்பைவிட வித்தியாசமான டிசைனைக் கொண்டிருக்கிறது. காரின் பக்கவாட்டுப் பகுதியில் எந்த மாற்றமும் இல்லை. முன்பக்கத்தைப் போலவே, பின்பக்க பம்பரும் புதிதாக இருக்கிறது. இதைத் தவிர, பின்பக்கத்தில் வேறு எந்த மாற்றங்களும் இல்லை.

 

செலெரியோ


காருக்குள்ளே நுழைந்தால், கறுப்பு - பீஜ் வண்ண டூயல் டோன் டேஷ்போர்டு நம்மை வரவேற்கிறது. டோர் பேடு - சீட் கவர் ஆகியவை, இதற்கேற்ப மேட்சிங்காக பீஜ் நிறத்தில் காட்சியளிக்கின்றன. கேபினில் ஆங்காங்கே சில்வர் வேலைப்பாடுகளும் எட்டிப்பார்க்கின்றன. ஆனால், இந்த பேஸ்லிஃப்ட் மாடலிலும் மாருதி சுஸூகி டச் ஸ்க்ரீனைச் சேர்க்கவில்லை. அனைத்து வேரியன்ட்டிலும், ஓட்டுநருக்கான காற்றுப்பை மற்றும் ஓட்டுநர் சீட் பெல்ட் அணியாவிட்டால், அதை காருக்குள் இருப்பவர்களுக்கு உணர்த்தக்கூடிய வார்னிங் அமைப்பும் ஸ்டாண்டர்டாக இருக்கிறது.

 

kwid


மேலும், முன்பக்க பயணிக்கான காற்றுப்பை மற்றும் ஏபிஎஸ், அனைத்து வேரியன்ட்டிலும் ஆப்ஷனலாக வழங்கப்படுகின்றன. தவிர, விரைவில் அமலுக்கு வரவிருக்கும் கார்களுக்கான Pedestrian - Offset - Side Impact இந்தியப் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஏற்ப, செலெரியோ காரை மேம்படுத்தியிருக்கிறது மாருதி சுஸூகி. 68bhp பவர் - 9kgm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் - 5 ஸ்பீடு மேனுவல்/AMT கியர்பாக்ஸ் அப்படியே தொடர்கிறது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க