Published:Updated:

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு: மத்திய அரசு விளக்கம் அளிக்க உத்தரவு!

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு: மத்திய அரசு விளக்கம் அளிக்க உத்தரவு!
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு: மத்திய அரசு விளக்கம் அளிக்க உத்தரவு!
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு: மத்திய அரசு விளக்கம் அளிக்க உத்தரவு!

புதுடெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக எந்த முறையைப் பின்பற்றி ஒதுக்கீடு  செய்யப்பட்டது மற்றும் எந்தவிதமான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன  என்பது குறித்து 8 வாரங்களுக்குள் மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்ச  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக எம்.எல். ஷர்மா என்ற வழக்கறிஞர், உச்ச  நீதிமன்றத்தில் பொதுநலன் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில்,"184 நிலக்கரி சுரங்கங்கள் முறைகேடாக ஒதுக்கீடு செயய்ப்பட்டுள்ளதாக மத்திய  கணக்கு தணிக்கை அதிகாரியானசி.ஏ.ஜி.யின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனவே அவற்றுக்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.ஒதுக்கீட்டில் நடந்துள்ள  முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.இதில்  அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கிறது.அவர்கள் மீது உரிய  நடவடிக்கை எடுக்க வேணடும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான அமர்வு முன்பு இன்று  விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய கணக்கு தணிக்கை  அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்ததோடு,  இக்குற்றச்சாட்டுகளுக்கு ஏற்கனவே பதில் அளிக்கப்பட்டிருக்கிறது என்று வாதாடினார்.

##~~##
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,மத்திய அரசை கடுமையாக குறைகூறினர்.  மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி அரசியல் சட்டப்படி நியமிக்கப்பட்டவர்.அதை  நம்புவதில் என்ன தவறு இருக்கிறது? இதற்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?  இதில் மத்திய மாநில அரசுகளின் பங்கு என்ன? இந்த ஒதுக்கீடு மூலம் சில  அரசியல்வாதிகளின் உறவினர்கள் ஆதாயம் பெற்றார்களா? என அடுக்கடுக்கான  கேள்விகளைக் கேட்டனர்.
அத்துடன் இந்தியாவில் உள்ள நிலக்கரி சுரங்கங்களை 194 நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு  செய்துள்ள மத்திய அரசு,இந்த ஒதுக்கீடு தொடர்பாக எந்த முறையைப் பின்பற்றி ஒதுக்கீடு  செய்யப்பட்டது மற்றும் எந்தவிதமான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன  என்பது குறித்து 8 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.