Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தச் சின்ன கார்ல ஆறு பேர் போகலாம்..! மஹிந்திரா KUV 1OO நெக்ஸ்ட்

யுட்டிலிட்டி வாகனங்களுக்குப் பேர்போன மஹிந்திரா வெளியிட்ட முதல் ஹேட்ச்பேக்தான் `KUV1OO'. இது மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் / இக்னிஸ், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஆகிய கார்களுக்குப் போட்டியாக, இந்தியாவில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகமானது. காம்பேக்ட் எஸ்யூவி/க்ராஸ்ஓவர் போன்ற ஸ்டைலான தோற்றத்தைக்கொண்டிருந்தாலும், போட்டி மிகுந்த இந்திய கார் சந்தையில் KUV1OO-யால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதைச் சரிசெய்யும் பொருட்டு, அக்டோபர் 10, 2017 அன்று இந்த காரின் பேஸ்லிஃப்ட் மாடலைக் களமிறக்க உள்ளது மஹிந்திரா. 

வெளிப்புற டிசைன்

`KUV100 NXT' எனப் பெயரிலேயே மாற்றத்தை ஆரம்பித்திருக்கிறது மஹிந்திரா. தற்போதைய மாடலுடன் ஒப்பிடும்போது, இதில் அதிக மாற்றங்கள் இருக்கின்றன. வெளிப்புறத்தில் Faux Skid Plate உடனான புதிய முன்பக்க - பின்பக்க பம்ப்பர்கள், காருக்கு எஸ்யூவி போன்ற தோற்றத்தை அளிக்கும்விதத்தில் கட்டுமஸ்தாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் முன்பைவிட KUV1OO-ன் நீளம் 25 மிமீ அதிகரித்து, 3700 மிமீ என மாறியிருக்கிறது. இதனுடன் கதவுகள் மற்றும் டெயில் கேட்டின் வடிவமைப்பிலும் வித்தியாசங்கள் தென்படுகின்றன. 

மஹிந்திரா

Clear Lens ஹெட்லைட் & டெயில் லைட், க்ரோம் க்ரில் ஆகியவை புதிய லுக்கில் இருக்கின்றன. க்ராஸ்ஓவர்களில் காணப்படும் பாடி க்ளாடிங், KUV100 NXT-ன் பக்கவாட்டுப் பகுதியில் இடம்பெற்றுள்ளன. புதிய 15 இன்ச் Diamond Cut அலாய் வீல்களின் டிசைனும் ஃப்ரெஷ்ஷாக இருக்கிறது. ரூஃப் ரெயில் மற்றும் பின்பக்க ஸ்பாய்லர் இருப்பது பெரிய ப்ளஸ். தற்போதைய மாடலைப்போலவே, KUV100 NXT காரிலும் மூன்று டூயல் டோன் கலர் ஆப்ஷன்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உட்புற டிசைன்

முன்பு 24 வேரியன்ட்களில் (பெட்ரோல் / டீசல்) விற்பனை செய்யப்பட்ட இந்த கார், இனி K2+, K4+, K6+, K8, K8+ (பெட்ரோல் / டீசல்) எனும் 10 வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கும். அதேபோல KUV100 NXT காரை, ஆறு சீட்டராக பொசிஷன் செய்திருக்கிறது மஹிந்திரா. ஆனால், ஐந்து சீட்டர் கார்தான் வேண்டும் என்பவர்களுக்கு, Made-To-Order அடிப்படையில் அந்த ஆப்ஷனும் சேர்க்கப்பட்டிருப்பது ஆறுதல்.

KUV 1OO NXT

ஆரம்ப வேரியன்ட்கள் கிரே நிற கேபினையும், விலை அதிகமான டாப் வேரியன்ட்கள் கறுப்பு நிற கேபினையும் கொண்டிருக்கின்றன. முன்பு போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது `டச் ஸ்க்ரீன் இல்லை' என்ற குறைபாட்டை KUV100 NXT காரில் களைந்திருக்கிறது மஹிந்திரா. 

சிறப்பம்சங்கள்

மஹிந்திரா

புதிய 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் MapmyIndia வழங்கும் சாட்டிலைட் நேவிகேஷன் வசதியிருக்கிறது. புதிய வசதிகளைப் பொறுத்தவரை, ரிமோட்டால் Lock/Unlock செய்யக்கூடிய டெயில்கேட், எலெக்ட்ரிக்கலாக மடிக்கக்கூடிய ரியர் வியூ மிரர்கள், ரியர் பார்க்கிங் சென்சார், கியர் இண்டிகேட்டர் - மைலேஜ் - டிரைவிங் மோடுகளைக் காட்டும் MID சிஸ்டம், டிரைவர் சீட்டின் உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் திறன், பல்வேறு கன்ட்ரோல்களுடன்கூடிய ஸ்டீயரிங் வீல், கூல்டு க்ளோவ் பாக்ஸ், Mood Lighting எனப் பட்டியலில் முன்னேற்றம் தெரிகிறது. இரண்டு காற்றுப்பைகள், ABS, EBD, கார்னர் பிரேக்கிங் கன்ட்ரோல் போன்ற பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இன்ஜின் & ஓட்டுதல் 

தற்போதைய மாடலில் இருக்கும் அதே 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர் பெட்ரோல் / டீசல் இன்ஜின்களே, KUV100 NXT காரிலும் தொடர்கின்றன. ஆனால், இவை முன்பைவிட அதிக மைலேஜையும் ஸ்மூத்தான டிரைவிங்கையும் மனதில்வைத்து ரீ-டியூன் செய்யப்பட்டிருக்கின்றன. மேம்படுத்தப்பட்ட இன்ஜின் மவுன்ட் மற்றும் ஏர் ஃபில்டர் போன்றவை இதற்கான சிறந்த உதாரணம்.

ignis

ஓட்டுதல் அனுபவத்தை மேம்படுத்தும்விதமாக, முன்பக்க - பின்பக்க சஸ்பென்ஷனின் Travel Rate அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், கிரவுண்ட் க்ளியரன்ஸ் - Approach & Departure Angle ஆகியவையும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இப்படி காரில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருப்பதால், முன்பைவிட சற்றே அதிக விலையில் `KUV100 NXT' வெளிவருவதற்கான சாத்தியங்கள் அதிகம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement