வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (08/10/2017)

கடைசி தொடர்பு:08:35 (09/10/2017)

இந்தியாவில் முதன்முறையாக, டிரக்குகளில் டாடா மோட்டார்ஸ் புதிய சாதனை!

 

wabco

இந்தியாவில்தான் விற்பனை செய்யும் MCV & HCV (Medium & Heavy Commercial Vehicles) வாகனங்களில், பிரிமியம் கார்களில் காணப்படும் பாதுகாப்பு வசதியான Electronic Stability Control (ESC)-யைப் பொருத்தியுள்ளது டாடா மோட்டார்ஸ். முதற்கட்டமாக, Prima (Tractors -  4025.S, 4925 & Trucks - 2523T, 3123T, 3723T) & Signa (LPS 4018, LPS 4923, LPT 25T, LPT 31T, LPT 37T) சீரிஸ் டிரக்குகளில் இவை இடம்பெற்றுள்ளன. மேலும் Automatic Traction Control (ATC) மற்றும் Hill Start Aid (HSA) போன்ற பாதுகாப்பு வசதிகள், டாடாவின் டிரக் மற்றும் பஸ்களில் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. கமர்ஷியல் வாகனங்களுக்கான இத்தகைய பாதுகாப்புத் தொழில்நுட்பங்களுக்காக, Wabco இந்தியா நிறுவனத்துடன் இணைந்து டாடா மோட்டார்ஸ் பணிபுரிந்துள்ளது. 

 

டாடா மோட்டார்ஸ்

 

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு, வாகன விதிமுறைகளின் அடிப்படையில், மத்திய அரசாங்கத்தால் 12 டன்னுக்கும் அதிகமான எடை (GVW) உள்ள டிரக்குகளில், AntiLock Braking System (ABS) கட்டாயமாக்கப்பட்டது தெரிந்ததே. ESC-ன் முக்கியமான பணி, வாகனத்தின் ரோடு க்ரிப் குறைவது போலத் தெரிந்தால், வீல்களின் வேகத்தைக் கட்டுபடுத்தி, வாகனத்தை அது செல்ல வேண்டிய திசையில் சீராகப் பயணிக்க வைப்பதே ஆகும். இதில் வீல்களின் வேகத்தைக் குறைக்கக்கூடிய ABS அமைப்பு ஏற்கெனவே இருந்ததால், Skidding - RollOver - Jack Knifing ஆகியவற்றை சென்சார்களின் உதவியுடன் கணிக்கக்கூடிய ESC, ABS உடன் பார்ட்னர்ஷிப் வைப்பதன் வாயிலாக, எந்த வேகத்திலும் வாகனத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்பதுடன், விபத்துகள் குறைவதற்கான சாத்தியமும் இருக்கிறது. 

 

wabco

 

வழுக்கலான இடங்களில் நிகழக்கூடிய Wheel Spin அளவுகளை, ATC கட்டுப்படுத்திவிடுகிறது. இதனால் வாகனத்துக்கு கூடுதலான நிலைத்தன்மை கிடைப்பதுடன், டயர்களின் ஆயுளும் அதிகரிக்கும் எனச் சொல்லப்படுகிறது. மலைச் சாலைகளில் நீங்கள் செல்ல நேரிடும்போது, வாகனம் பின்னோக்கிச் செல்வதைத் தவிர்ப்பதுதான் HSA. இதனால் பிரேக் லைனரில் ஏற்படக்கூடிய அதிகப்படியான அழுத்தம் குறைவதுடன், க்ளட்ச்சின் உராய்வையும் குறைக்க முடியும் எனத் தெரிகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ESC -   Pneumatic ABS - ATC - HSA சேர்ந்து, வாகனத்தின் பாதுகாப்பு - மைலேஜ் - ஆயுள் ஆகியவை அதிகரிக்கும்; பராமரிப்புச் செலவுகள் குறையும்; 50% Rollover Crash மற்றும் 25% Loss Of Control Crash விபத்துகளைக் குறைக்கும் எனலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க