Published:Updated:

போபர்ஸை போன்று நிலக்கரி ஊழலையும் மக்கள் மறந்துவிடுவார்கள்: சுஷில் குமார் ஷிண்டே

போபர்ஸை போன்று நிலக்கரி ஊழலையும் மக்கள் மறந்துவிடுவார்கள்: சுஷில் குமார் ஷிண்டே
போபர்ஸை போன்று நிலக்கரி ஊழலையும் மக்கள் மறந்துவிடுவார்கள்: சுஷில் குமார் ஷிண்டே
போபர்ஸை போன்று நிலக்கரி ஊழலையும் மக்கள் மறந்துவிடுவார்கள்: சுஷில் குமார் ஷிண்டே

புதுடெல்லி: போபர்ஸை போன்று நிலக்கரி ஊழலையும் மக்கள் மறந்துவிடுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறியுள்ள கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு விவகாரம், மத்திய அரசுக்கு பெரும் தலை வலியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன், 2 ஜி அலைக்கற்றை முறைகேடு, இரண்டு மத்திய அமைச்சர்களின் பதவியை பதம் பார்த்த நிலையில், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜனதா கட்சி கோரி வருகிறது.

இந்த கோரிக்கையை முன் வைத்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரையும் நடத்த விடாமல் பா.ஜனதா முடக்கியது.

இந்நிலையில், புனேவில் நடைபெற்ற ஒரு விழாவில் பங்கேற்றுப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே,"முன்பு போபர்ஸ் ஊழல் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர் மக்கள் அதை மறந்து விட்டார்கள். அதேபோல் இப்போது நிலக்கரி சுரங்க ஊழல். இதையும் மக்கள் விரைவில் மறந்துவிடுவார்கள்"என்று தெரிவித்தார்.சுஷில் குமார் ஷிண்டே கூறியுள்ள கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்நிலையில்,சுஷில் குமார் ஷிண்டேவின் இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள  பா.ஜனதா மூத்தத் தலைவர்களில் ஒருவரான ராஜ்நாத் சிங் "நிலக்கரி சுரங்க ஊழலை மக்கள் மறந்து விடுவார்கள் என காங்கிரஸ் கட்சி நினைத்தால், அது தவறு என்பதை காங்கிரஸ் கட்சி உணரும் என்றும், மக்களுக்கு எல்லாமும் தெரியும் என்றும் கூறியுள்ளார்.

சுஷில் குமார் ஷிண்டேவின் கருத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட், ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா உள்ளிட்ட கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.இந்த விவகாரம் பற்றி மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் ஜெய்ஸ்வால் கருத்து எதுவும் சொல்ல மறுத்துவிட்டார்.