Published:Updated:

இறந்த நிலையில் ஸ்ரீதர் படம்! உறுதிப்படுத்துமா காவல்துறை?

இறந்த நிலையில் ஸ்ரீதர் படம்! உறுதிப்படுத்துமா காவல்துறை?
இறந்த நிலையில் ஸ்ரீதர் படம்! உறுதிப்படுத்துமா காவல்துறை?

காஞ்சிபுரம் தாதா ஸ்ரீதர் தற்கொலை செய்து கொண்டார் என கடந்த 4ம் தேதி இரவு தமிழகம் முழுவதும் தகவல் பரவியது. “இந்த நிலையில் ஸ்ரீதர் இறந்து விட்டார் என்று நாங்கள் உறுதிப்படுத்தவில்லை. கைரேகை மற்றும் டிஎன்ஏ  சோதனைக்கு பிறகே அவர் இறந்து விட்டார் என்பதை உறுதி செய்வோம்“ என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.

அவர் தற்கொலை செய்து கொண்டார் என அவரது வழக்கறிஞர் மலையூர் புருஷோத்தமன் மீடியாக்களுக்கு தகவல் கொடுத்துவிட்டு கம்போடியா சென்றார். 6ம் தேதி கம்போடியாவில் இருந்து வந்த ஸ்ரீதரின் மகள், 7ம் தேதி  மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஸ்ரீதரின் உடலை இந்தியா கொண்டுவர மனு அளித்தார். இதில் அவர் மாரடைப்பு காரணமாக 4ம் தேதி இரவு 10.35க்கு உயிரிழந்ததாகவும் கம்போடியாவில் உள்ள கீமா மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில் ஸ்ரீதர் இலங்கை பாஸ்போர்ட்டில் கம்போடியா சென்றிருக்கலாம் என்பதால், அவர் உடலை இந்தியா கொண்டுவருவதில் சிக்கல் நீடிக்கிறது. இந்த நிலையில் ஸ்ரீதர் இறந்த நிலையில் உள்ள படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் இருப்பது ஸ்ரீதர்தானா என்பதை காவல்துறையினர் உறுதிப்படுத்துவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.