Published:Updated:

பரமக்குடியில் பறிமுதல் செய்யப்பட்ட 280 வாகனங்களை விடுவிக்க கோரிக்கை!

பரமக்குடியில் பறிமுதல் செய்யப்பட்ட 280 வாகனங்களை விடுவிக்க கோரிக்கை!
பரமக்குடியில் பறிமுதல் செய்யப்பட்ட 280 வாகனங்களை விடுவிக்க கோரிக்கை!

பரமக்குடியில் நடந்த தியாகி இமானுவேல் நினைவு தினத்துக்கு ஜான்பாண்டியனுடன் வந்த வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளதை விடுவிக்க வேண்டி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ராமநாதபுரம் எஸ்பியிடம் இன்று மனு அளித்தனர். இதுபற்றி நம்மிடம் பேசியவர்கள், ‘’தியாகி இமானுவேல் சேகரன் குருபூஜைக்கு ஆண்டுதோறும் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனத்தலைவர் ஜான்பாண்டியன், அஞ்சலி செலுத்த இங்கு வருவது வழக்கமானது. அனால், இந்த ஆண்டு மட்டும் தலைவரை வரவேற்க பரமக்குடி வந்த 280 வாகனங்கள்மீது வழக்குப் பதிவு செய்து அவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது அரசு பயங்கரவாதமாகும்.

இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இதைப்பற்றி எங்கள் தலைவர், டிஜிபியிடம் முறையிட்டுள்ளார், அவர், ராமநாதபுரம் எஸ்பிக்கு அறிவுறுத்தியதாகக் கூறியுள்ளார். எனவே எந்த ஆண்டும் இல்லாத வகையில் தேவேந்திரர்கள்மீது அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதாக எண்ணுகிறோம். எஸ்,பி எங்கள் புகாரை ஏற்று எங்கள்மீது புனையப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கு அவர் கட்டுப்பாட்டிலுள்ள காவல் நிலையங்களுக்கு அறிவுறுத்த கேட்டுள்ளோம், வாகனங்களைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்'' என்றனர்.