Published:Updated:

அதிக பாரத்தால் அந்தரத்தில் தொங்கிய லாரி... கோவையில் பரபரப்பு!

அதிக பாரத்தால் அந்தரத்தில் தொங்கிய லாரி... கோவையில் பரபரப்பு!
அதிக பாரத்தால் அந்தரத்தில் தொங்கிய லாரி... கோவையில் பரபரப்பு!

கோவையில், அதிக பாரம் ஏற்றி வந்த லாரி அந்தரத்தில் தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

லாரி, டெம்போ உள்ளிட்ட சரக்கு வாகனங்களில், அளவுக்கு அதிகமான பாரம் ஏற்றுவது வாடிக்கையாகிவிட்டது. குறிப்பாக, கோவை பீளமேடு ரயில் நிலையத்திலிருந்து சரக்குகளை ஏற்றி வரும் கனரக லாரிகள், அவ்வழியே வந்து செல்வதற்கு ஏற்கெனவே அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், பீளமேடு முருகன்நகர் ஹட்கோ காலனியில் இன்று மாலை வந்த லாரி, அதிக பாரத்துடன் வந்துள்ளது. அப்போது, சாலையிலிருந்த சிறு குழியில் இறங்கிய லாரி பாரம் தாங்காமல், தள்ளாடியது. இதையடுத்து, பின்பக்கமாகத் தூக்கிய லாரியின் முன்பக்கம் அந்தரத்தில் தொங்கியது. இதனால், அந்தப் பகுதியில் இருக்கும், 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

பின்னர், 3 மணி நேரத்துக்கு மேல் போராடி, அந்தரத்தில் தொங்கிய லாரி மீட்கப்பட்டது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதிக பாரம் ஏற்றியதற்காக, அபராதம் விதித்த போலீஸார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 முதல் கட்ட விசாரணையில், அந்த லாரி ஸ்டீல் கம்பெனிக்குச் சொந்தமானது என்று தெரியவந்துள்ளது.