அட, காபி குடிச்சா இத்தனை நன்மையா? (Sponsored Content) | Benefits of coffee (Sponsored Content)

வெளியிடப்பட்ட நேரம்: 20:17 (13/10/2017)

கடைசி தொடர்பு:16:23 (14/10/2017)

அட, காபி குடிச்சா இத்தனை நன்மையா? (Sponsored Content)

நம் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்திருக்கிறது காபி. நம்மில் பலருக்கு காலையில் ஒரு கப் காபி குடித்தால்தான் வேலையே ஓடும். இன்னும் சிலர் ‘பெட் காபி’ பிரியர்களாக இருப்பார்கள். காபி, கையில் கிடைத்தால்தான் கண்களையே திறப்பார்கள். 

தமிழர்களின் பண்பாட்டில், வாழ்க்கை முறையில், பழக்க வழக்கங்களில் இருந்து காபியைப் பிரிக்கவே முடியாது. தமிழ்நாட்டில் காபிக் கடை இல்லாத தெருக்களே இல்லை என்று சொல்லாலம். பெரிய விழாக்களோ, சின்ன நிகழ்வுகளோ காபி இல்லாமல் களை கட்டுவதில்லை. அவ்வளவு ஏன், சிலபேர் காபி குடிப்பதற்காகவே பல கிலோ மீட்டர் பயணம் செய்த கதையெல்லாம் இருக்கிறது. இப்படி எல்லோரையும் வசீகரித்திருக்கிற காபி, ஏராளமான நன்மைகளைத் தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கிறது. அவை என்னென்ன... பார்க்கலாமா?  
 
நுகர்ந்தாலே மனஅழுத்தம் குறையும்!

தூக்கமின்மை போன்ற பிரச்னைகளால், கூடுதல் மனஅழுத்தத்தில் இருப்பவர்கள் காபி மணத்தை நுகர்ந்தால், அது குறைவதாக சியோல் (Seol) தேசியப் பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஒன்று கூறுகிறது. `டென்ஷன் அதிகமாக இருப்பவர்கள் காபி பீன்ஸ் அடங்கிய பாக்கெட்டை படுக்கைக்கு அருகே வைத்துத் தூங்கினால் அது குறையும்’ என்கிறார்கள் மருத்துவர்கள்.  
 
பார்க்கின்சன் நோயைத் தடுக்க உதவும்!

`காபியில் உள்ள கஃபைன், பார்க்கின்சன் நோய் உண்டாவதற்கான சாத்தியக்கூறுகளைக் குறைக்கும்’ என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஏற்கெனவே இந்த நோய் உள்ளவர்கள், காபியைத் தொடர்ந்து சாப்பிட்டுவர நோயின் தீவிரம் குறையும்.
 
லிவருக்கு நல்லது!

`காபியைத் தொடர்ந்து குடித்துவருபவர்களுக்கு கல்லீரல் நோய்க்கு எதிரான பாதுகாப்பு வளையம் உருவாகிறது’ என 2006-ம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட ஓர் ஆய்வு கூறுகிறது. 
மதுப் பழக்கத்தால் உண்டாகும் `Non-alcoholic fatty liver disease’ (NAFLD) எனப்படும் கல்லீரல் நோய் பாதிக்காமல் காப்பாற்றவும் செய்கிறது காபி. 

மகிழ்ச்சியாக வைத்திருக்கும்!

காபிக்கு மனஅழுத்தத்தைக்  குறைக்கும் ஆற்றல் உண்டு. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட்கள் நம் மனநிலையை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகின்றன.. 

தற்கொலை எண்ணங்களைத் தவிர்க்கும்!

காபியின் இருக்கும் கஃபைனுக்கு நம் உடலில் செரடோனின், டோபோமைன் மற்றும் நார்அட்ரலின் (Noradrenaline) போன்ற ஹார்மோன்களைச் சுரக்கச் செய்யும் தன்மை உண்டு. இந்த ஹார்மோன்களுக்கு மன மாற்றத்தை ஏற்படுத்தும் தன்மையும், மனஅழுத்தத்தைக் குறைக்கும் ஆற்றலும் உண்டு. அதனால் காபி பிரியர்களுக்கு தற்கொலை எண்ணங்கள் வருவதில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. 

மூளைக்கு ஆரோக்கியம்! 

தெற்கு ஃபுளோரிடா பல்கலைக்கழகம் மற்றும் மியாமி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், காபியைத் தொடர்ந்து குடித்து வருபவர்களுக்கு அல்சைமர் நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். 

விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகம்!

காபி குடிக்கும்போது உருவாகும் ஹார்மோன்கள் மூளையை அலெர்ட் செய்கின்றன; உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது; கண் பார்வை விரிகிறது; சுவாசக் குழாய் நன்கு திறக்கிறது; தசைகளுக்கு அதிக ரத்தம் அனுப்பப்படுகிறது; அதனால் விளையாட்டு வீரர்களின் திறன் அதிகரிக்கிறது. 

இதயநோயைத் தடுக்கும்!

இதயநோய், சர்க்கரைநோய் மற்றும் கல்லீரல் நோய்களைத் தடுக்கும் ஆற்றலும் காபிக்கு உண்டு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன..

காபி குடிக்க காரணம் வேண்டுமா என்று 'காபி லவ்வர்ஸ்' கேட்பது புரிகிறது..? யாராக இருந்தாலும், காபியை ஒருமுறை குடித்த உடனே ‘பேஷ் பேஷ் ரொம்ப நல்லாயிருக்கு’ என்று சொல்லி காபி கிளப்பில் சேர்ந்துவிடுவார்கள். அதிலும் பல வருடங்களாக மணம் கமழும் காபியை அளித்து வருவது நரசுஸ் காபி நிறுவனம். நரசுஸ் காபி அலாதிச் சுவையானது. அதைக் குடிப்பவர்கள், அதற்குப் பிறகு தினமும் காபி குடிக்காமல் இருக்க மாட்டார்கள்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close