Published:Updated:

விளாசிய கலெக்டர்... வெடவெடத்துப்போன அதிகாரி... சுத்தமான ஊராட்சிகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
விளாசிய கலெக்டர்... வெடவெடத்துப்போன அதிகாரி... சுத்தமான ஊராட்சிகள்
விளாசிய கலெக்டர்... வெடவெடத்துப்போன அதிகாரி... சுத்தமான ஊராட்சிகள்

விளாசிய கலெக்டர்... வெடவெடத்துப்போன அதிகாரி... சுத்தமான ஊராட்சிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

                       
 

டெங்கு கொசுக்களை உற்பத்திசெய்யும் குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்கச் சொன்ன மக்களிடம், 'குப்பை அள்ளவா என்னை தனி அலுவலராக நியமித்துள்ளார்கள்?' என்று உதார் காட்டிய அதிகாரி பணிந்தார். மக்கள் சொன்ன குப்பைகளை அகற்ற அவரே நடவடிக்கை எடுத்திருக்கிறார். நமது விகடன் இணையதளச் செய்திக்குப் பிறகு, மாவட்ட ஆட்சியரின் அழுத்தத்தால்தான் குப்பைகள் அகற்ற நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய தனி அலுவலராக இருப்பவர் கிருஷ்ணமூர்த்தி. இந்த கிருஷ்ணராயுபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கள்ளப்பள்ளி, லாலாப்பேட்டை, சிந்தலவாடி ஆகிய பஞ்சாயத்துகளில், சாலைகளின் ஓரம் குப்பைகள் குவிந்து, டெங்கு கொசுக்களை உற்பத்திசெய்வதாக பகுதி மக்கள் புலம்பினர். 'அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி' கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய தனி அலுவலர் கிருஷ்ணமூர்த்தியிடம் மக்கள் கோரிக்கை வைக்க, ரொம்ப அசால்ட்டாக, 'குப்பை அள்ளவா என்னை தனி அலுவலராக நியமித்துள்ளார்கள்?' என்று கடுகடுத்திருக்கிறார். இந்தச் சம்பவம் பற்றி, கடந்த 15-ம் தேதி, விகடன் இணையதளத்தில், 'குப்பை அள்ளவா என்னை தனி அலுவலராக நியமித்துள்ளார்கள்? பொதுமக்களிடம் கடுகடுக்கும் அதிகாரி!' என்ற தலைப்பில் செய்தி பதிந்திருந்தோம்.

இந்தச் செய்தி, கரூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் கவனத்துக்குப் போக, தனி அலுவலர் கிருஷ்ணமூர்த்தியை போனில் பிடித்து லெஃப்ட் அண்டு ரைட் வாங்கியிருக்கிறார். இதனால், வெடவெடத்துப்போன கிருஷ்ணமூர்த்தி,மூன்று ஊராட்சிகளிலும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் 100 நாள் வேலை பார்ப்பவர்களை களத்தில் இறக்கிவிட்டு, குப்பைகளைக் க்ளீன் செய்யச் சொல்லியிருக்கிறார். நம்மிடம் மக்கள் குமுறிய இடங்களில் குவிந்து கிடந்த குப்பைகளைத் துப்புரவுப் பணியாளர்கள் சுத்தம் செய்ய, இப்போது மூன்று ஊராட்சிகளும் குப்பைகள் இல்லாமல் பளிச்சிடுகின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு