Published:Updated:

பிலிப்பைன்ஸில் கவிழ்ந்த கப்பல்! மாயமான தூத்துக்குடி மாலுமியை மீட்டுத் தர உறவினர்கள் கோரிக்கை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பிலிப்பைன்ஸில் கவிழ்ந்த கப்பல்! மாயமான தூத்துக்குடி மாலுமியை  மீட்டுத் தர உறவினர்கள் கோரிக்கை
பிலிப்பைன்ஸில் கவிழ்ந்த கப்பல்! மாயமான தூத்துக்குடி மாலுமியை மீட்டுத் தர உறவினர்கள் கோரிக்கை

பிலிப்பைன்ஸில் கவிழ்ந்த கப்பல்! மாயமான தூத்துக்குடி மாலுமியை மீட்டுத் தர உறவினர்கள் கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலைச் சேர்ந்த இளைஞர், கப்பல் கவிழ்ந்த விபத்தில் மாயமானதால், அவரை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள், மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

புன்னக்காயல் கிராமத்தைச் சேர்ந்தவர், பெபின் தோமாஸ். துபாயைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டு வரும் ஸ்டெல்லார் ஓஷன் டிரான்ஸ்போர்ட் என்ற கப்பல் கம்பெனிக்குச் சொந்தமாக, ’ஸ்டார் எமரால்டு’ என்ற 33,205 டன் எடை கொண்ட சரக்குக் கப்பல், கடந்த 13-ம் தேதி  இந்தியாவைச் சேர்ந்த 26 ஊழியர்களுடன் இந்தோனேசியாவிலிருந்து சீனாவுக்குச் சென்றுகொண்டிருந்தது. திடீரென வீசிய பயங்கர புயலின் காரணமாக, பிலிப்பைன்ஸ் அருகே கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தை  ஜப்பான் கடற்படையினர் உறுதிசெய்தனர். தொடர்ந்து அவ்வழியே சென்ற ’டென்சா கோப்ரா’ என்ற கப்பல்மூலம் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 10 ஊழியர்களையும், எஸ்.எம். சாமரிந்தா என்ற கப்பல்மூலம் ஐந்து ஊழியர்களையும் மீட்டனர். ஆனால், கடலில் தத்தளித்த மீதமுள்ள 11 ஊழியர்கள் என்ன ஆனார்கள் என்பதுபற்றித் தெரியவில்லை. ஜப்பான் கடற்படையினர், மாயமான 11 ஊழியர்களைத் தேடும் பணியில் இரண்டு ரோந்துப் படகுகள் மற்றும் மூன்று விமானங்களை அனுப்பித் தேடிவருகின்றனர்.. 

மாயமான இந்த 11 பேரில், புன்னக்காயல் கிராமத்தைச் சேர்ந்த பெபின் தாமஸும் ஒருவர். மாயமானவர்களை மீட்கும் நடவடிக்கையை விரைந்து எடுக்கக்கோரி, பெபின் தாமஸின் பெற்றோர் மற்றும் புன்னக்காயல் மாலுமிகள் நலச்சங்கத்தினர் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். பெபின் தாமஸ் மாயமான சம்பவத்தால் புன்னக்காயல் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு