Published:Updated:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தீபாவளி வாழ்த்து!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தீபாவளி வாழ்த்து!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தீபாவளி வாழ்த்து!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தீபாவளி வாழ்த்து!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர், பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "தீபாவளியைக் கொண்டாடும் சகோதரர்கள், சகோதரிகள் அனைவருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒளி-பிரகாசம்-வெளிச்சம் என்பதுடன் தொடர்புடைய தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் அனைவரின் வாழ்விலும் நன்மையும், உண்மையும்,மென்மையும் உன்னத மனிதநேயத் தன்மையும் ஒளி சிந்திட வாழ்த்துகிறோம்.

பழம்பெரும் நாடாகிய பாரத தேசத்து மக்கள், ஒன்றே குலம் - ஒருவனே தேவன் என்பதில் ஆழமான நம்பிக்கையுடையவர்கள். இந்த நம்பிக்கையே இந்திய மக்கள் எல்லோரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வைப் போற்றி நிற்கிறது. இந்தியாவில் வாழும் அனைத்து மத, மொழி, இன, கலாசாரங்களைக் கொண்ட அனைவரும், ஒரு தாய் மக்கள் என்ற உணர்வில் வாழ வேண்டும். இந்த உணர்வில் நம்பிக்கையுள்ள நல்லவர்கள், தேசத்துக்கு நல்வழி காட்டவும் வேற்றுமையில் ஒற்றுமை பேணுகிற மக்களாக எல்லோரும் வாழவும் இறையருளை வேண்டுகிறோம். தீபாவளியைக் கொண்டாடும் சகோதரர்கள், சகோதரிகள் அனைவருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு