கோவையில், 'ஈரநெஞ்சம்' அறக்கட்டளை சார்பில், தெருவோரம் வசிப்பவர்களுடன் தீபாவளி கொண்டாடப்பட்டது.


 

நாளை தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால், தமிழகமே விழாக்கோலம் பூண்டுள்ளது. வண்ண வண்ண உடைகளுடனும் இனிப்புகளுடனும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படும். ஆனால், தெரு ஓரம் இருப்பவர்களுக்கு இவை எதுவுமே கிடையாது. யாராவது உணவு கொடுத்தால், வயிறு நிரம்பும். இல்லையென்றால் அதுவும் கிடையாது. இந்நிலையில், கோவையில் 'ஈரநெஞ்சம்' அறக்கட்டளை சார்பில் தெரு ஓரம் இருப்பவர்களுடன் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டது.  அதன்படி, இன்று காலை கோவை அரசு மருத்துவமனை அருகே பேருந்து நிறுத்தத்தில் இருப்பவர்களுக்கு முடி வெட்டி, ஷேவிங் செய்யப்பட்டது. மேலும், அவர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

வினோத்

கேரளாவைச் சேர்ந்த வினோத், "நா போன வருஷம் கோவை வந்தேன். இங்க ஒரு கம்பெனில வேலை செஞ்சுட்டு இருந்தப்ப, எனக்கு ஆக்சிடென்ட் ஆச்சு. அதுக்கப்பறம் ஒரு 500 ரூபா கொடுத்து என்னை அனுப்பிட்டாங்க. எனக்கு அம்மா மட்டும்தான். அவங்க ஊர்ல இருக்காங்க. ஆக்சிடென்ட்ல கால் அடிபட்ருச்சு. இப்ப ஒரு காலை வெச்சுக்கிட்டு வேலைக்கும் போக முடியலை. யாராவது சாப்பாடு கொடுத்தா சாப்டுவேன். கால் சரியானதுக்கு அப்பறம்தான் வேலைக்குப் போகணும்.

லட்சுமி

தீபாவளிக்காக இங்க முடி வெட்டி, புதுத்துணி எல்லாம் கொடுக்கறாங்க. ஆனா, எங்க ஊர்ல அப்படி இல்லை. எந்த விஷேசத்துக்கும் அங்க இப்படி எல்லாம் பண்ண மாட்டாங்க என்றார். முதுமை நிறைந்திருந்த லட்சுமி. 'என் ஊரு தேனி. எனக்கு ரெண்டு பையன்கள், ரெண்டு பொண்ணுங்க. ஒரு பையன் வக்கீல். இன்னொரு பையன் இன்ஜினீயர். என்னோட மருமகள்கள் வந்ததுக்கு அப்புறம் பசங்க மாறிட்டாங்க. மருமகள்கள், வீட்டுக்குள்ளேயே வரக்கூடாதுனு சொல்லிட்டாங்க. அதனால, வீட்ட விட்டு வந்துட்டேன். எனக்கு 70 வயசு ஆகுது. நான் வீட்ட விட்டு வந்த கொஞ்ச நாளுக்கு அப்பறம், பசங்க சொத்துக்காக என்னைத் தேடி வந்தாங்க. சொத்துல கையெழுத்துப் போட்ட அப்புறம் போய்ட்டாங்க. இப்பக்கூட என்னோட சொந்தக்காரங்க சிலர் என்னத் தேடி வருவாங்க. ஆனா, அவங்ககூட போக எனக்கு இஷ்டம் இல்ல. யாராவது நல்ல மனசுக்காரங்க சாப்பாடு கொடுப்பாங்க. ஆனாலும், நான் ஒரு அநாதை. குழந்தை பெத்த மலடி நான்" என்றார் கண்ணீருடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு