Published:Updated:

'மின்சாரத்துக்கு ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்கிறார்'- கலெக்டரிடம் புகார் அளித்த மலைக்கிராம மக்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
'மின்சாரத்துக்கு ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்கிறார்'- கலெக்டரிடம் புகார் அளித்த மலைக்கிராம மக்கள்
'மின்சாரத்துக்கு ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்கிறார்'- கலெக்டரிடம் புகார் அளித்த மலைக்கிராம மக்கள்

'மின்சாரத்துக்கு ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்கிறார்'- கலெக்டரிடம் புகார் அளித்த மலைக்கிராம மக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'மின்சாரத்துக்கு ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்கிறார்'- கலெக்டரிடம் புகார் அளித்த மலைக்கிராம மக்கள்

'சேலம் மாவட்டம், வாழப்பாடி பெலாப்பாடி மலைக்கிராமத்தை ஒட்டியுள்ள கோட்டமேடு பகுதியில், காலம் காலமாக மின்சாரம் கிடையாது. லாந்தர் விளக்கு வைத்துதான் குழந்தைகள் படிக்கிறார்கள். மின்சார சப்ளை கேட்டால், பேளூர் மின்சார உதவிப் பொறியாளர் யுவராஜ் 3 லட்சம் பணம் கேட்கிறார்' என்று கோட்டமேடு மக்கள் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

'மின்சாரத்துக்கு ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்கிறார்'- கலெக்டரிடம் புகார் அளித்த மலைக்கிராம மக்கள்


இதுபற்றி கோட்டமேடு பகுதியைச் சேர்ந்த வரதராஜன் கூறுகையில், ''பெலாப்பாடி, கோட்டமேடு என்பது மலைக்கிராமங்கள். நாங்கள் எல்லோரும் மலை சாதி மக்கள். எங்களுக்கு காலம்காலமாக மின்சாரம் கிடையாது. லாந்தர் விளக்குவைத்துதான் வாழ்ந்துட்டு இருக்கிறோம். 6 மணிக்கு மேல எந்த வேலையும் செய்ய முடியாது. வீட்டுக்குள்ள ஒரு பூச்சி புளு வந்தாக்கூட தெரியாது. மின்சார வசதிக்காக பல வருஷமா போராடினோம். கடந்த 3 வருஷத்துக்கு முன்பு, பெலாப்பாடி கிராமத்துக்கு மின்சாரம் கொடுத்தார்கள். எங்களுக்கும் விடிவுகாலம் பொறந்துடுச்சுனு இருந்தோம். ஆனா, பெலாப்பாடியில் மட்டும் மின்சாரம் கொடுத்துட்டு, பெலாப்பாடியில இருந்து அரை கி.மீட்டர் தொலைவில் உள்ள கோட்டமேடு பகுதிக்கு மின்சாரம் கொடுக்கவில்லை.

அதையடுத்து, எங்க கிராமத்துக்கும் மின்சார சப்ளை கொடுக்கணும்னு பல அதிகாரிகளைச் சந்திச்சு மனு  கொடுத்தும், எங்க கிராமத்துக்கு மின் வசதி செய்துதரலை. 5 கம்பம் நட்டாலே, எங்க கிராமத்துக்கு கரன்ட்  வந்துரும், மின்சார வாரியத்தில் சொன்னால், அங்கிருக்கும் மின்சாரத்துறை உதவிப் பொறியாளர் யுவராஜ், 3 லட்ச ரூபாய் லஞ்சம் கொடுத்தால் மின் சப்ளை செய்து கொடுப்பதாகவும் இல்லையென்றால் மின்சாரம் கொடுக்க முடியாது என்று பகிரங்கமாகச் சொல்லுகிறார்'' என்றார்.


இதுபற்றி பேரூர் உதவி செயற்பொறியாளர் யுவராஜிடம் கேட்டதற்கு, ''நான் அப்படி யாரிடமும் லஞ்சம் கேட்கவில்லை. கோடமேடு கிராமத்துக்கு, மத்திய அரசின் தீனதயாள் திட்டத்தின்மூலம் இலவச மின்சாரத்துக்கு பரிந்துரைசெய்திருக்கிறோம். அந்த மலைக் கிராமத்தில், வெளியில் இருப்பவர்கள் விவசாய நிலங்கள் வாங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு மின்சார வசதி வேண்டும் என்ற காரணத்துக்காக அந்த மக்களைத் தூண்டிவிடுகிறார்கள்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு