Published:Updated:

பசு வதையைத் தடுத்த சாஃப்ட்வேர் இன்ஜினீயருக்கு நடந்த சோகம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பசு வதையைத் தடுத்த சாஃப்ட்வேர் இன்ஜினீயருக்கு நடந்த சோகம்!
பசு வதையைத் தடுத்த சாஃப்ட்வேர் இன்ஜினீயருக்கு நடந்த சோகம்!

பசு வதையைத் தடுத்த சாஃப்ட்வேர் இன்ஜினீயருக்கு நடந்த சோகம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தியாவின் வட மாநிலங்களில், பசுவை இறைச்சிக்காகக் கொல்பவர்களைக் கொலைசெய்யும் அளவுக்கு எதிர்ப்புக் காட்டிவரும் நிலையில், கர்நாடகாவில் பசுவதை செய்வதைத் தடுக்க முயன்ற விலங்குகள் நல ஆர்வலர் நந்தினியை, 100-க்கும் மேற்பட்டவர்கள் கல்லால் அடித்துத் துரத்தி இருக்கிறார்கள். அதில், விலங்கு நல ஆர்வலரான நந்தினிக்கு கை, கால், மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில்  கிடந்து, பின் காப்பாற்றப்பட்டிருக்கிறார். கற்களால் இவரின் கார் கண்ணாடிகள் சுக்குநூறாக உடைக்கப்பட்டிருக்கிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் நந்தினி. இவர், சாஃப்ட்வேர் இன்ஜினீயராகப் பணியாற்றுவதோடு, விலங்குகள் நல ஆர்வலராகவும் இருந்துவருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, தன் தோழி ரிஜியோடு காரில் சென்றுகொண்டிருக்கும்போது, தாவரகரே போலீஸ் லிமிட்டுக்கு உட்பட்ட ஆவலஹள்ளி என்ற இடத்தில் பசுக்களை லாரிகளில் கொண்டுவந்து இறங்கி, கசாப்புப் போட்டுக் கொண்டிருப்பதைப் பார்ந்த நந்தினி, காரைத் திருப்பிக்கொண்டு தாவரகரே காவல் நிலையத்துக்குச் சென்று, சட்ட விரோதமாக பசுக்களை லாரிகளில் ஏற்றிக்கொண்டு வந்து, கொலைசெய்துகொண்டிருக்கிறார்கள் என்று புகார் கொடுத்தார்.

அதையடுத்து, தாவரகரே போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்துவிட்டு வந்திருக்கிறார்கள். சற்று நேரம் கழித்து போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்ற நந்தினி, நான் கொடுத்த புகாரின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர் என்று போலீஸாரிடம் விசாரித்திருக்கிறார். போலீஸார், ''நீங்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரித்துக்கொண்டிருக்கிறோம், இன்னும் விசாரணை முடியவில்லை. விசாரணை முடிந்த பிறகு நடவடிக்கை எடுப்போம்'' என்று கூறியிருக்கிறார்கள். போலீஸார் ஏமாற்றுவதாக உணர்ந்த நந்தினி, மீண்டும் காரை எடுத்துக்கொண்டு சம்பவ இடமான ஆவலஹள்ளி பகுதிக்குச் சென்று சத்தம் போட்டிருக்கிறார். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்த கற்களை நந்தினியின் மீது வீசியிருக்கிறார்கள். இதில், நந்தினிக்கு கை, கால், மண்டை உடைந்தது. அவருடைய காரின்மீதும் கற்களை வீசியதால், கார் கண்ணாடிகள் சுக்கு நூறாக உடைந்ததோடு, காரும் சிதைந்து போனது. அதையடுத்து, நந்தினியின் தோழியான விலங்குகள் நல ஆர்வலர் புஷ்பா, தாவரகரே காவல்நிலையத்தில் நந்தினி கற்களைக்கொண்டு தாக்கியதைப் புகாராகக் கொடுத்தார். அதையடுத்து, நேற்று 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். தலைமறைவாக உள்ள பலரை காவல்துறையினர் தேடிவருகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு