Published:Updated:

தூத்துக்குடி மாநகராட்சியில் ‘அட்சய பாத்திரம்’ திட்டம் தொடங்கப்பட்டது !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தூத்துக்குடி மாநகராட்சியில் ‘அட்சய பாத்திரம்’ திட்டம் தொடங்கப்பட்டது !
தூத்துக்குடி மாநகராட்சியில் ‘அட்சய பாத்திரம்’ திட்டம் தொடங்கப்பட்டது !

தூத்துக்குடி மாநகராட்சியில் ‘அட்சய பாத்திரம்’ திட்டம் தொடங்கப்பட்டது !

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தூத்துக்குடி மாநகராட்சியில் ’அன்போடு தூத்துக்குடி’ என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக ‘’அட்சய பாத்திரம்’’ திட்டத்தை மாநகராட்சி ஆணையாளர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் தொடங்கி வைத்தார்.  

‘அட்சய பாத்திரம்’ திட்டம் குறித்து பேசிய ஆணையாளர் ஆல்பி ஜான் வர்க்கீஸ், ‘’தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் ஆதரவற்ற, உழைக்க இயலாத ஏழ்மை நிலையிலுள்ள மக்களின் பசியைப் போக்கிடும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. உணவுப் பொருள்கள் வைப்பதற்காக மாநகராட்சி வளாகத்தில் ஒரு குளிர்சாதன பெட்டி வைக்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு உதவ வேண்டும் என நினைப்பவர்கள் தங்கள் வீட்டிலுள்ள பழ வகைகள், உலர்ந்த ரொட்டிகள், டின்களில் அடைக்கப்பட்ட உணவு, கேக் வகைகள், பேக்கரி உணவுப் பொருள்கள், பிஸ்கட், சீலிடப்பட்ட ஜூஸ் பாட்டில்கள், சீலிடப்பட்ட தண்ணீர் பாட்டில்கள், வீட்டில் சமைக்கப்பட்ட பொட்டலமாக கட்டப்பட்ட உணவுகள் என இவற்றை குளிர்சாதனப் பெட்டிகள் வைத்துச்செல்லலாம். 

அதே நேரத்தில் சமைக்கப்படாத இறைச்சி, சமைக்கப்படாத கடல் உணவு, பச்சை முட்டைகள், திறந்த நிலையிலுள்ள பால், பாதி உண்ணப்பட்ட  உணவு, மதுபானங்கள், காலாவதியான உணவு, அழுகும் நிலையிலுள்ள அல்லது அழுகிய பழங்கள் ஆகிய உணவுப் பொருள்கள் தடை செய்யப்பட்டுள்ளன. தினமும் காலையில் 7 மணி முதல் இரவு 9 மணி வரையில் உணவுப் பொருள்களை வைத்துச் செல்லலாம். உணவுப் பொருள் தேவைப்படுவோர் இதே நேரத்துக்குள் வந்து எடுத்துச்செல்லலாம். இந்தப் பெட்டிக்குள் வைக்கப்படும் உணவுப் பொருளை எடுத்து உண்பவர் உண்ணும் நிலையில்தான் இந்த உணவுப் பொருள் இருக்கிறதா என்பதை மாநகராட்சி ஊழியர் ஆய்வு செய்த பின்னரே இப்பெட்டிக்குள் வைக்க முடியும். ‘உண்பதற்கு முன் உதவி செய்’ என்பதுதான் இதன் நோக்கம். இதன் மூலம் உணவுப் பொருள்கள் பசியால் வாடும் ஒரு ஜீவனுக்குப் போய்ச் சேரும். 

தொண்டு செய்யும் உள்ளமுடையவர்களையும் பசியால் வாடுபவர்கள், உதவி தேவைப்படுபவர்களை ஒரே இடத்தில் இணைக்கும் விதமாகத்தான் இந்த அட்சய பாத்திரம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. உணவுப் பொருள் மட்டுமல்லாமல் இதன் அருகில் இருக்கும் நன்கொடைப் பெட்டகத்தில் ஆடைகள், புத்தகங்கள், காலணிகள், பாத்திரங்கள், பேனா, நோட்டுகள் மற்றும் இதரப் பயனுள்ள பொருள்களையும் வைக்கலாம். ’தேவையில்லாததை விட்டுச் செல்க, தேவையானவற்றை பெற்றுச் செல்க’ என்பதுதான் இந்த நன்கொடைப் பெட்டகத்தின் நோக்கம். எனவே, மாநகராட்சி மக்கள் பெருமளவு உதவிட வேண்டும்’’ என்றார். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு