Published:Updated:

ஜார்க்கண்ட்: ஆசிரம நெரிசலில் சிக்கி 9 பேர் பலி!

ஜார்க்கண்ட்: ஆசிரம நெரிசலில் சிக்கி 9 பேர் பலி!
ஜார்க்கண்ட்: ஆசிரம நெரிசலில் சிக்கி 9 பேர் பலி!
ஜார்க்கண்ட்: ஆசிரம நெரிசலில் சிக்கி 9 பேர் பலி!

தியோகர்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆசிரமம் ஒன்றில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 9 பேர்  பலியாயினர்;24 பேர் காயமடைந்தனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள தியோகர் நகரில் சத்சங் ஆசிரமம்  உள்ளது.இந்த ஆசிரமத்தில் இன்று காலை அணுகூல் சந்திரா என்பவரது விழா  கொண்டாடப்பட்டது.

விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.அவர்கள் அனைவரும்  ஒரே சமயத்தில் ஆசிரமத்தில் நுழைந்தனர்.அப்போது பக்தர்களிடையே திடீரென  தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டது.பக்தர்கள் வெளியேற வழி  இல்லாததால் நெரிசல் அதிகரித்தது.நெரிசலில் ஏராளமான பக்தர்கள் சிக்கி  அலறினார்கள்.

50-க்கும் மேற்பட்டவர்கள் மயங்கி விழுந்தனர்.அவர்கள் மீது மற்ற பக்தர்கள்  ஏறிமிதித்தப்படி சென்றனர்.இதனால் 9 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி  பலியானார்கள்.அவர்களில் 8 பேர் பெண்கள் ஆவார்கள்.

##~~##
சுமார் ஒரு மணிநேரப் போராட்டத்துக்குப் பிறகே 9 பேரின் உடல்களை மீட்க முடிந்தது.  மேலும் 24 பேர் படுகாயம் அடைந்தனர். இதில், சிலரது நிலை கவலைக்கிடமாக  உள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விழாவுக்கு போதுமான அளவுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை என்று  முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.