Election bannerElection banner
Published:Updated:

வங்கி பாஸ்புக், ஏ.டி.எம் கார்டு கொடுத்தால் பணம்! தொழிலாளர்களைக் குறிவைக்கும் கந்துவட்டிக் கும்பல்

வங்கி பாஸ்புக், ஏ.டி.எம் கார்டு கொடுத்தால் பணம்! தொழிலாளர்களைக் குறிவைக்கும் கந்துவட்டிக் கும்பல்
வங்கி பாஸ்புக், ஏ.டி.எம் கார்டு கொடுத்தால் பணம்! தொழிலாளர்களைக் குறிவைக்கும் கந்துவட்டிக் கும்பல்

வங்கி பாஸ்புக், ஏ.டி.எம் கார்டு கொடுத்தால் பணம்! தொழிலாளர்களைக் குறிவைக்கும் கந்துவட்டிக் கும்பல்

கன்னியாகுமரி மாவட்டத்தில், தொழிலாளர்களின் ஏ.டி.எம் கார்டுகளை வாங்கி வைத்துக்கொண்டு, கந்துவட்டிக் கும்பல் வசூலில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாக உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில், அடித்தட்டு மக்களைக் குறிவைத்து சிலர் வட்டிக்கு கடன் கொடுக்கின்றனர். இவர்களிடம் ஏ.டி.எம் கார்டு, வீட்டுப் பத்திரம்  போன்ற சில ஆவணங்களைக் கொடுத்து பணம் பெறுகிறார்கள். இதுபோன்ற வட்டி வசூல் கும்பல்களிடம் சிக்கி, தங்கள் வாழ்க்கையைப் பலர் தொலைத்துள்ளனர். இதைத் தடுக்கும் வகையில், அரசு சட்டம் பிறப்பித்து செயல்படுத்திவருகிறது. இதனால் மறைமுகமாக வட்டி வசூல் தொழில் நடந்துவருகிறது. கன்னியாகுமரி மாவட்டம்  நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி துப்புரவுத் தொழிலாளர்களுக்கு, தற்போது வங்கிக் கணக்குகள் மூலமாக சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த சம்பளப் பணத்தை வங்கி ஏ.டி.எம்  கார்டு மூலம் தொழிலாளர்கள் எடுத்துக்கொள்கின்றனர். இவர்களுக்கு பணம் தேவைப்படும் நேரத்தில், வட்டிக் கும்பலிடம் தொழிலாளர்கள் பணம் வாங்கும்போது, அவர்கள் ஏ.டி.எம் கார்டுகளை வாங்கி வைத்துக்கொண்டு, பணத்தைக் கொடுக்கின்றனர்.

பணத்தேவை அவசரத்தினால், தொழிலாளர்கள் ஏ.டி.எம் கார்டுகளை ஒப்படைத்து பணத்தை வாங்குகின்றனர். இதனால் தொழிலாளர்களுக்கு சம்பளம் வந்தவுடன் வட்டி வசூல் செய்யும் கும்பல், ஏ.டி.எம் கார்டுகளைப் பயன்படுத்தி பணத்தை எடுத்துவிடுகிறது. வட்டி போக, மீதித் தொகை ஏதாவது இருந்தால், அதைத் தொழிலாளர்களிடம் வட்டிக் கும்பல் வழங்கும். சில ஆண்டுகளுக்கு முன், தொழிலாளர்களிடமிருந்து வங்கி பாஸ்புக்கை வாங்கி வைத்துக்கொண்டு, வட்டிக் கும்பல் பணம் கொடுத்தது. சம்பளம் வரும் அன்று மொத்தமாக தொழிலாளர்களின் வங்கி பாஸ் புக்குகளை வைத்துக்கொண்டு, வங்கியின் அருகில் வட்டி வசூல் கும்பல் நிற்கும். அவர்களிடமிருந்து வங்கி பாஸ் புக்கை வாங்கி, தொழிலாளர்கள் பணத்தை எடுத்துவருவார்கள். உடனே வட்டிக் கும்பல் அந்தப் பணத்தையும், வங்கி பாஸ் புக்கையும் வாங்கிக்கொண்டு, வட்டிபோக மீதிப் பணத்தை தொழிலாளர்களிடம் கொடுப்பார்கள்.

இதனால், திடீர் அவசரத் தேவைகளுக்கு மீண்டும் பணம் தேவைப்படும்போது, வட்டி வசூல் கும்பலிடம் தொழிலாளர்கள் போய் நிற்கின்றனர். இதன்மூலம், தொழிலாளர்கள் மீண்டும் மீண்டும் வட்டிக் கடனில் மூழ்கி, தன் வாழ்நாள் முழுவதும் வட்டி கட்டியே வாழ்ந்துவிடுகின்றனர். இவர்கள் யாரும் காவல்துறையினரிடம் புகார்கள் கொடுப்பதில்லை. இதனால், இதுபோன்ற தொழிலாளர்களை குறிவைத்து வசூல் கும்பல் வளைத்துப் போட்டுவிடுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 10 பேர் கந்துவட்டிக் கொடுமையால் தற்கொலைசெய்துள்ளனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு