Election bannerElection banner
Published:Updated:

கந்துவட்டிக் கொடுமை! - தீக்குளித்த இசக்கிமுத்துவும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு

கந்துவட்டிக் கொடுமை! - தீக்குளித்த இசக்கிமுத்துவும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு
கந்துவட்டிக் கொடுமை! - தீக்குளித்த இசக்கிமுத்துவும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு

கந்துவட்டிக் கொடுமை! - தீக்குளித்த இசக்கிமுத்துவும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு

நெல்லை மாவட்டம் காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் அதே

ஊரைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவரிடம் கடன் வாங்கினார். அதற்கு கந்து வட்டி வசூலித்ததால் பணத்தைச் செலுத்த முடியாமல் இசக்கிமுத்து திணறினார். இந்த நிலையில், காவல்துறையினரும் கடன் கொடுத்தவர்களுக்கு ஆதரவாக இசக்கிமுத்து குடும்பத்தினரை மிரட்டினார்கள். இது தொடர்பாக நெல்லை ஆட்சியரிடம் 5 முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், கந்துவட்டிக் கும்பலின் நெருக்கடி ஒருபக்கம், காவல்துறையினரின் நெருக்குதல் மறுபக்கம் என இசக்கிமுத்து மற்றும் அவர் மனைவி சுப்புலட்சுமி ஆகியோர் மன அழுத்தத்துக்கு உள்ளானார்கள். இதனால் ஆட்சியரிடம் 6 வது முறையாக மனு அளிக்க வந்த அவர்கள் திடீரென குழந்தைகளுடன் சேர்ந்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டனர். பதைபதைக்க வைத்த இந்தக் கொடூரச் சம்பவம் காரணமாகக் குழந்தைகளும் சுப்புலட்சுமியும் உயிரிழந்த நிலையில், இசக்கிமுத்து மட்டும் உயிருக்கு ஆபத்தான சூழலில் சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால், சிகிச்சைப் பலன் அளிக்காமல் இசக்கிமுத்து உயிரிழந்தார். சுப்புலட்சுமி, குழந்தைகள் மதி சரண்யா, அட்சய் பரணிகா ஆகியோர் நேற்று உயிரிழந்த நிலையில் அவர்களின் உடல்களை உள்ளூர் அ.தி.மு.க-வினரின் நெருக்கடி காரணமாக உடனடியாக எடுத்துச் சென்று நெல்லையிலேயே எரியூட்டினர். அத்துடன், நேற்று நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட எஸ்.பி-யான அருண்சக்திகுமார், இசக்கிமுத்து குடும்பத்தினர் பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாகப் புகார் தெரிவித்து இருந்தார்.

இதனால் அதிருப்தி அடைந்த இசக்கிமுத்துவின் தந்தை பல்வேசம், சகோதரர் கோபி மற்றும் உறவினர்கள், `இசக்கிமுத்துவும் அவர் குடும்பத்தினரும் தீக்குளித்த நிலையிலும், அந்தக் குழந்தைகள் மீதுகூட இரக்கம் வராமல் போலீஸார் பொய்யான புகாரைத் தெர்வித்து இருக்கிறார்கள். அவர்களது செயலைக் கண்டிக்கிறோம். அதற்கு நியாயம் கிடைக்காத வரையிலும் இசக்கிமுத்து உடலை வாங்க மாட்டோம்’ எனத் தெரிவித்து உடலை வாங்க கையெழுத்துப் போட மறுத்தனர். அத்துடன், சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக மக்கள் அதிகாரம் அமைப்பினரும் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனால் போலீஸார் அனைவரையும் குண்டுக்கட்டாகத் தூக்கி வேனில் ஏற்றினார்கள். இந்தச் சம்யத்தில் இசக்கிமுத்துவின் சகோதர் கோபி மயங்கி விழுந்தார். அவர் முகத்தில் தண்ணீர் தெளித்த போலீஸார் அவருக்கு சிகிச்சை எதையும் அளிக்காமல் வேனில் ஏற்றியபடி காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை சமாதானப்படுத்தி இசக்கிமுத்து உடலை பெற்றுக்கொள்ள பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அ..தி.மு.க-வின் உள்ளூர் பிரமுகர்கள் சிலரும் இந்தப் பணியில் போலீஸாருக்கு உதவியாகச் செயல்பட்டு வருகிறார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு