Election bannerElection banner
Published:Updated:

பாலியல் தொல்லை செய்யப்பட்ட பெண்ணை வீடியோ எடுத்த மக்கள்!

பாலியல் தொல்லை செய்யப்பட்ட பெண்ணை வீடியோ எடுத்த மக்கள்!
பாலியல் தொல்லை செய்யப்பட்ட பெண்ணை வீடியோ எடுத்த மக்கள்!

பாலியல் தொல்லை செய்யப்பட்ட பெண்ணை வீடியோ எடுத்த மக்கள்!

ந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில், பெண்ணைப் பட்டப் பகலில் பாலியல் தொல்லை செய்ததால் இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அந்தப் பெண்ணைப் பாலியல் துன்புறுத்தல் செய்த முழு வீடியோ ஆதாரம் இருக்கிறது. ஆனால், நேரில் பார்த்த ஒருவர்கூட முன்வந்து காப்பாற்ற முயற்சி செய்யவில்லை.

விசாகப்பட்டினம், வேப்பகுண்டா என்ற பகுதியில் வசித்து வந்த பெண், தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் கடந்த 22-ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். விசாகப்பட்டின ரயில் நிலையம் அருகில் இருக்கும் நடைபாதையில் தங்கியிருந்த வேளையில், 20 வயது இளைஞர் ஒருவர் அவரைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார். இந்தச் சம்பவம், பகல் பொழுதில், மிகவும் பரபரப்பாக இருக்கும் இடத்தில் நடந்திருக்கிறது. சம்பவத்தை நேரில் பார்த்துக்கொண்டிருந்த ஒருவர்கூட அந்தப் பெண்ணைக் காப்பாற்ற முன்வரவில்லை. அங்கிருந்த ஆட்டோ டிரைவர் மட்டும் தன்னுடைய கைப்பேசியில் வீடியோவாகப் பதிவு செய்தார். அதை உடனுக்குடன் போலீஸுக்குத் தகவலும் அளித்தார். மேலும், அந்த வீடியோ வைரல் ஆனது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், "சம்பவம் நடப்பதாகத் தகவல்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன. ஆறுக்கு மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வந்தன. ஆனால், அங்கிருந்த யாரும் சம்பவம் நடக்காமல் தடுக்க முயற்சி செய்யவில்லை. தகவல் கொடுப்பதைத் தவிர்த்து, அந்தப் பெண்ணுக்கு உதவி இருக்கலாம்" என்றார்.

இப்போது இருக்கும் சூழலில், யாருக்கு என்ன நடந்தால் நமக்கென்ன என்ற நிலைதான் மக்கள் மத்தியில் அதிகம் இருக்கிறது. இந்த நிலை மாறினால்தான், கண்முன் நடக்கும் குற்றங்கள் குறையும். 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு