Election bannerElection banner
Published:Updated:

வீட்டில் போதைப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை! : போலீஸை அதிரவைத்த வாடகைதாரர்

வீட்டில் போதைப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை! : போலீஸை அதிரவைத்த வாடகைதாரர்
வீட்டில் போதைப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை! : போலீஸை அதிரவைத்த வாடகைதாரர்

வீட்டில் போதைப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை! : போலீஸை அதிரவைத்த வாடகைதாரர்

விழுப்புரத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களைக் கைப்பற்றியதோடு, அந்த வீட்டுக்கும் சீல் வைத்திருக்கின்றனர் போதைப்பொருள் தடுப்பு போலீஸார்.

விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட கீழ்பெரும்பாக்கம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை சட்டவிரோதமாகத் தயார் செய்து வருவதாகப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறைக்கு ரகசியப் புகார் சென்றிருக்கின்றது. புகாரின் அடிப்படையில் மாவட்ட உணவுப் பாதுகாப்புப் பிரிவின் நியமன அலுவலர் வரலட்சுமி தலைமையில் அந்தப் பகுதியில் அதிரடியாக ஆய்வை மேற்கொண்ட போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸ், அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போதைப் பொருள் தயாரிக்கும் மினி தொழிற்சாலை செயல்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அந்த வீட்டுக்குள் அதிரடியாகச் சென்று சோதனை நடத்திய போலீஸார் அங்கிருந்த சுமார் 100 கிலோ அளவுள்ள மாவா (குட்கா) பாக்கெட்டுக்களைக் கைப்பற்றியதோடு அந்த வீட்டுக்கும் சீல் வைத்தனர்.

இதுகுறித்துப் பேசிய மாவட்ட உணவுப் பாதுகாப்புப் பிரிவின் நியமன அலுவலர் வரலட்சுமி, “விழுப்புரம் நகராட்சிப் பகுதிக்குட்பட்ட கீழ்பெரும்பாக்கம் பகுதியில் புகழேந்தி நகரில் பாலாஜி அமர்நாத் என்பவர் வாடகை வீட்டில் தடை செய்யப்பட்ட போதைப்பொருளைத் தயாரித்து வருகிறார் என்ற தகவல் மாவட்ட ஆட்சியருக்குக் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் பாலாஜி அமர்நாத் வீட்டில் நடத்திய சோதனையில் மாவா குட்காவைத் தயாரித்தது உறுதி செய்யப்பட்டது. அதேபோல அங்கிருந்த 100 கிலோ மாவாகப் பொருள்களைக் கைப்பற்றியதோடு, அந்த வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டு, தலைமறைவாகியிருக்கும் அவரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த பாலாஜி அமர்நாத் மீது கடந்த வருடம் ஏற்கெனவே 35 கிலோ போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது” என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு