Election bannerElection banner
Published:Updated:

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கொள்ளையர்கள் சிக்கினர்!

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கொள்ளையர்கள் சிக்கினர்!

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கொள்ளையர்கள் சிக்கினர்!

ஜெயங்கொண்டம் பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவங்களால் பொது மக்கள் அதிர்ச்சியில் உறைந்திருந்த கொள்ளையர்கள் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளனர்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகில் உள்ள மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் காசிநாதன் மகன் வீரப்பன். இவர் தற்போது ஜெயங்கொண்டத்தில் வசித்து வருகிறார். மேலூர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அதே ஊரை சேர்ந்த அன்பரசன் மற்றும் ரவி ஆகிய இருவரும் வீட்டில் உள்ளே சென்று மரப்பெட்டியில் இருந்த 5 பவுன் நகை மற்றும் பணத்தைத் திருடி சென்றுள்ளதாக ஜெயங்கொண்டம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து செயின்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் இரண்டு பேரும் வேறு எங்கும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டிருக்கிறார்களா என்று காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் இன்று தா.பழூர் அருகே கூழாட்டுகுப்பத்தை சேர்ந்தவர் ஜான்சி ராணி வீட்டில் 6 பவுன் நகை மற்றும் பணத்தையும் திருடியது மட்டுமல்லாமல் அவரைக் கத்தியால் குத்திவிட்டு சென்றிருக்கிறார்கள். அதே பகுதிக்ச் சேர்ந்த மதனை முத்து என்பவர் வீட்டிலும் மர்ம நபர்கள் திருடிச் சென்றிருக்கிறார்கள். இந்தக் குற்றத்தைச் செய்தவர்களைக் காவல்துறை தேடி வருகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.
 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு