Election bannerElection banner
Published:Updated:

புதுச்சேரியில் ரவுடிகள் கொல்லப்பட்டதற்குக் காரணம் இதுதான்..!

புதுச்சேரியில் ரவுடிகள் கொல்லப்பட்டதற்குக் காரணம் இதுதான்..!
புதுச்சேரியில் ரவுடிகள் கொல்லப்பட்டதற்குக் காரணம் இதுதான்..!

புதுச்சேரியில் ரவுடிகள் கொல்லப்பட்டதற்குக் காரணம் இதுதான்..!

புதுச்சேரியில் 3 ரவுடிகள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குழப்பம் நீடித்து வந்த நிலையில், அதற்கான காரணத்தை போலீஸ் இன்று தெரிவித்திருக்கிறது.

புதுச்சேரி, மேட்டுப்பாளையத்தில் கடந்த 18-ம் தேதி தீபாவளியன்று ரவுடிகள் நாய் சேகர், ஜெரால்டு, சதீஷ் உள்ளிட்ட மூன்று பேரை மர்மக் கும்பல் ஒன்று நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொடூரமாகக் கொலைசெய்தது. புதுச்சேரியையே உலுக்கிய இந்தக் கொலைகுறித்து வழக்குப் பதிவு செய்த மேட்டுப்பாளையம் போலீஸார், தமிழக ரவுடியான தமிழரசனைத் தேடி வந்தனர். இந்நிலையில் இந்தக் கொலைகளை நிகழ்த்திய மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சூர்யா, சுதாகர், வினோத், சின்னதுரை, நந்தகுமார் உள்ளிட்ட 5 பேரை இன்று காலை போலீஸார் கைதுசெய்தனர். மேலும், அவர்களிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்கள், செல்போன், மோட்டார் சைக்கிள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. அதையடுத்த, சில மணி நேரங்களிலேயே போலீஸாரால் தேடபட்டு வந்த விழுப்புரம் தாதா தமிழரசன் மற்றும் அவனது கூட்டாளிகளான அந்தோணி, வேலுமணி ஆகியோர் இன்று சேலம் ஜேஎம் 2 நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

அதையடுத்து இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராஜீவ்ரஞ்சன், “புதுச்சேரியில் கடந்த 18-ம் தேதி 3 ரவுடிகள் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று காலை சூர்யா, சுதாகர், வினோத் உள்ளிட்ட 5 பேர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் புதுச்சேரியிலிருந்து சாராயம் உள்ளிட்ட மதுபாட்டில்களைக் கடத்தி தமிழகத்தில் விற்பனை செய்த விவகாரத்தினால் ஏற்பட்ட தொழில் போட்டியால்தான் மூன்று பேரையும் கொலை செய்ததாகத் தெரிய வந்திருக்கின்றது” என்று தெரிவித்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு