Election bannerElection banner
Published:Updated:

பள்ளி வளாகங்களை மாணவர்களே சுத்தம் செய்ய வேண்டும் என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு

பள்ளி வளாகங்களை மாணவர்களே சுத்தம் செய்ய வேண்டும் என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு
பள்ளி வளாகங்களை மாணவர்களே சுத்தம் செய்ய வேண்டும் என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு

பள்ளி வளாகங்களை மாணவர்களே சுத்தம் செய்ய வேண்டும் என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு

பள்ளி வளாகங்களை மாணவர்களே சுத்தம் செய்ய வேண்டுமென்று மதுரை மாவட்ட சி.இ.ஓ. அறிவித்துள்ளதை, குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர்.

மதுரை மாவட்டத்தில் டெங்கு பரவி வருவதை தடுக்கவும், தூய்மை இந்தியா திட்டத்தைச் செயல்படுத்தவும், கலெக்டர்  பல வேலைகளைச் செய்துவருகிறார். அவரிடம் பாராட்டு பெறுவதற்காக சி.இ.ஓ. மாரிமுத்து, ''மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளும் வியாழக்கிழமைதோறும், ஆறு முதல் எட்டு வரை பயிலும் மாணவர்கள் பள்ளி வளாகத்தைச் சுத்தம் செய்ய வேண்டும், தண்ணீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்ய வேண்டும், வகுப்பு ஆசிரியர்கள் மேற்பார்வையிட்டு அலுவலக இணையதளத்தில் பதிவுசெய்ய வேண்டும் என்று'' உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையாகி வருகிறது.

இதுபற்றி  நம்மிடம் பேசிய தோழமை அமைப்பின் தேவநேயன், ''மாணவர்கள் மீதான நலனில்  கல்வி அதிகாரி எந்தளவுக்கு அக்கறை காட்டுகிறார் என்பதற்கு இந்த அறிவிப்பே எடுத்துக்காட்டு. குப்பையை எங்கு, எப்படி போட வேண்டும், எப்படிச் சுகாதாரமாக இருக்க வேண்டும் என்று மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கலாம். ஆனால், அவர்களையே குப்பைகளை அள்ளவும், தண்ணீர்த் தொட்டிகளைக் கழுவச்சொல்வது மோசமானது. ஒவ்வொரு பள்ளிக்கும் உதவியாளர்களை, துப்புரவு ஊழியர்களை நியமிக்க வேண்டியது கல்வித்துறையின் கடமை. அதைச் செய்யாமல் ஆறு, எட்டு பயில்கின்ற மாணவர்களைச் சுத்தம் செய்யச் சொல்வது கொடுமையான விஷயம். கிராமப்புறப் பள்ளிகளில் பாம்பு, பூச்சிகள் கடிக்கும் ஆபத்தும் உள்ளது. அடுத்து, கழிப்பறையைச் சுத்தம் செய்யச் சொல்வார்கள். வாரந்தோறும் சுத்தம் செய்ய வேண்டுமே என்ற மனச்சுமைக்கு மாணவர்கள் ஆளாவார்கள். முதலில்அனைத்துப் பள்ளிகளுக்கும் கழிப்பறை வசதியை சி.இ.ஓ. ஏற்படுத்தட்டும். கல்விக்கூடங்களைக் கற்காலத்துக்குக் கொண்டுசெல்லும் முயற்சியில் அதிகாரிகள் செயல்பட்டுவருகிறார்கள்.'' என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு