Election bannerElection banner
Published:Updated:

’கந்துவட்டி வசூலிப்போரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும்’ தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம்!

’கந்துவட்டி வசூலிப்போரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும்’ தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம்!
’கந்துவட்டி வசூலிப்போரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும்’ தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம்!

’கந்துவட்டி வசூலிப்போரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும்’ தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம்!

கந்து வட்டி வசூலிப்பவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடையநல்லூரில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

நெல்லை மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த, கூலித் தொழிலாளியான இசக்கிமுத்து அவசரத் தேவைக்காக கடன் வாங்கிய 1.45 லட்சம் ரூபாய் பணத்துக்கு வட்டியாக மட்டும் 2.34 லட்சம் ரூபாய் செலுத்தி உள்ளார், ஆனாலும், மீதிப் பணத்தைக் கொடுக்க வேண்டும் என கந்துவட்டி கொடுத்தவர் மிரட்டி உள்ளார். அவருக்கு ஆதரவாக காவல்துறையினரும் செயல்பட்டுள்ளனர். 

கந்து வட்டி கொடுத்த முத்துலட்சுமி என்பவருக்கு ஆதரவாக அச்சன்புதூர் காவல்நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த இசக்கிமுத்து கலெக்டர் அலுவலகத்தில் 5 முறை மனுக்கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் மனம் நொந்துபோன அவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். 

இசக்கிமுத்துவின் குடும்பத்தினர் தற்கொலை செய்யக் காரணமாக இருந்த கந்துவட்டி கொடுமையை தமிழக அரசு தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் நெல்லை மேற்கு மாவட்டம் சார்பாக மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் முகம்மது தாஹா இந்த ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை தாங்கினார். மாவட்டப் பொருளாளர் செய்யது மசூது, மாவட்ட துணைச்செயலாளர்கள் அஹ்மத், பாசித், மீரான்கனி, அப்துல்காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாவட்டத்தலைவர் முகம்மது பைஷல், ”கந்து வட்டியைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கந்து வட்டி கொடுப்பவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும். அப்பாவி மக்களைப் பாதிக்கும் கந்து வட்டியை தமிழகத்தில் இல்லாமல் செய்யும் அளவுக்கு காவல்துறையினர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஏராளமான ஆண்களும் பெண்களும் கந்து வட்டிக்கு எதிராகவும் கந்து வட்டியைத் தடுக்கத் தவறிய அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகளை குறிச்சி சுலைமான் உள்ளிட்ட கடையநல்லூர் அனைத்துக்கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர். 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு