Election bannerElection banner
Published:Updated:

கந்துவட்டி புகார்களை விசாரிக்க குமரியில் தனிப்படை அமைப்பு!

கந்துவட்டி புகார்களை விசாரிக்க குமரியில் தனிப்படை அமைப்பு!
கந்துவட்டி புகார்களை விசாரிக்க குமரியில் தனிப்படை அமைப்பு!

கந்துவட்டி புகார்களை விசாரிக்க குமரியில் தனிப்படை அமைப்பு!

தமிழகம் முழுவதும், நெல்லை மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமையினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கந்துவட்டி புகார்கள் தற்போது தூசி தட்டப்பட்டு உள்ளன. மாவட்டத்தில்  கந்துவட்டிப் புகார்களுக்கு ஆளானவர்கள் யார் யார் என கண்டுபிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை, போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி நேற்று காலை முதல் கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் பலர் கந்துவட்டி குறித்து புகார் கொடுத்துள்ளனர். நாகர்கோவில் அருகே உள்ள ஆசாரிபள்ளம் போலீஸ் ஸ்டேஷனில் ஒரே நாளில் 3 பேர் கந்துவட்டி புகார்கொடுத்தனர். கோட்டாறு மற்றும் வடசேரி போலீஸ் ஸ்டேஷனில் 2 புகார்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதுபோல தக்கலை போலீஸ் ஸ்டேஷனிலும் ஒரு புகார் வந்துள்ளது.

இந்தப் புகார்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து விசாரிக்க தனிப்படை ஒன்றை அமைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இந்தத் தனிப்படையினர் கந்துவட்டி புகார்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இவர்கள் தக்கலை, மார்த்தாண்டம், குழித்துறை, நாகர்கோவில், கோட்டாறு போன்ற பகுதிகளில் ரகசியமாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். கந்துவட்டிக்கு பணம் கொடுப்போர் பட்டியல் தயாரிப்பதோடு, வட்டிக் கும்பலால் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பதையும் அறிய விசாரணை நடந்துவருகிறது. கந்துவட்டி தொடர்பாக வரும் புகார்கள்மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கந்துவட்டிக் கும்பல் கலக்கத்தில் உள்ளது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு