Election bannerElection banner
Published:Updated:

ரூபாய் 28 லட்சம் பணத்தை திருடிச் சென்ற ஏ.டி.எம் வேன் டிரைவர்!

ரூபாய் 28 லட்சம் பணத்தை திருடிச் சென்ற ஏ.டி.எம் வேன் டிரைவர்!
ரூபாய் 28 லட்சம் பணத்தை திருடிச் சென்ற ஏ.டி.எம் வேன் டிரைவர்!

ரூபாய் 28 லட்சம் பணத்தை திருடிச் சென்ற ஏ.டி.எம் வேன் டிரைவர்!

சென்னை மீனம்பாக்கம் அருகே ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்புவதற்காக பணம் எடுத்துச் சென்றபோது, பணத்தை வண்டியின் ஓட்டுநரே திருடிச் சென்றுள்ளார்.

ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் குறைவாக இருக்கும்போது வங்கிகளில் இருந்து பணம் நிரப்புவதற்காக எடுத்துச் செல்லப்படும். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருக்கும் கனரா வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணத்தை நிரப்புவதற்காக கருணாகரன் மற்றும் ராஜ்குமார்  சென்றுள்ளனர்.  டிரைவர் உதயகுமார், உடன் இருந்த காவலரை, அதிகாரிகள் அழைப்பதாக பொய் சொல்லி அனுப்பியுள்ளார். காவலர் விமான நிலையத்தில் இருக்கும் ஏ.டி.எம்முக்குச் சென்றதும், வண்டியில் இருந்த ரூபாய் 28 லட்சத்தை திருடிச் சென்றுள்ளார் டிரைவர். 

பணத்தை ஏ.டி.எம்மில் நிரப்பிவிட்டு திருப்பி வந்த அதிகாரிகள் மற்றும் காவலர் வாகனம் இல்லாததும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து, சென்னை விமான நிலைய போலீஸில் புகார் அளித்தனர். காவல்துறை வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, பணம் நிரப்பும் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த வாகனத்தை சென்னை மீனம்பாக்கம் அருகில் இருக்கும் கல்லூரி அருகில் விட்டு தப்பிச் சென்றுள்ளது தெரியவந்தது. தற்போது டிரைவர் உதயகுமாரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு