Published:Updated:

அமெரிக்காவுக்காக அன்னிய முதலீடை அனுமதிக்கவில்லை: மன்மோகன் சிங்

அமெரிக்காவுக்காக அன்னிய முதலீடை அனுமதிக்கவில்லை: மன்மோகன் சிங்
அமெரிக்காவுக்காக அன்னிய முதலீடை அனுமதிக்கவில்லை: மன்மோகன் சிங்
அமெரிக்காவுக்காக அன்னிய முதலீடை அனுமதிக்கவில்லை: மன்மோகன் சிங்

புதுடெல்லி: அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கு ஏற்ற வகையில் மத்திய அரசு  கொள்கைகளை வகுப்பதாக குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி கூறியுள்ள  குற்றச்சாட்டை மறுத்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்,அமெரிக்காவுக்காக சில்லரை  வர்த்தகத்தில் அன்னிய முதலீடை அனுமதிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

பா.ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் நேற்று பேசிய குஜராத் முதலமைச்சர்  நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அமெரிக்க பயணத்திற்கும்,   சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டிற்கு (FDI)அனுமதி அளிக்கப்பட்டதற்கும்   தொடர்பு உள்ளதாகவும், அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கு ஏற்ற வகையில்  பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு கொள்கைகளை வகுப்பதாகவும்  குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற உச்ச நீதிமன்ற  தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வந்த பிரதமர்,  செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, மோடியின் குற்றச்சாட்டு குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.

##~~##
அதற்கு பதிலளித்த மன்மோகன்,"அமெரிக்காவுக்காக இந்தியாவில் சில்லரை வணிகத்தில்  அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கவில்லை.மற்றவர்கள் கூறுவதை மத்திய அரசு  செய்யாது.இந்தியாவுக்கு எது சிறந்ததோ,அதையே மத்திய அரசு செய்யும் ” என்றார்.
மேலும், இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்யும் முறை குறித்து உச்ச நீதிமன்றம்  அளித்துள்ள தீர்ப்பு குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.