

புதுடெல்லி: முலாயம் சிங் ஆதரித்தால் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர தயாராக உள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு,சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு அனுமதி ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து,ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து, திரிணாமுல் காங்கிரஸ் கடந்த வாரம் விலகி,ஆதரவையும் திரும்ப பெற்றுக்கொண்டது.
இந்நிலையில்,மத்திய அரசின் மேற்கூறிய நடவடிக்கைகளை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி,மத்தியில் ஆட்சியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராகவும்,சாமான்ய மக்களின் நலன்களுக்காகவும் தாம் தொடர்ந்து போராட உள்ளதாக தெரிவித்தார்.
##~~## |