Published:Updated:

பள்ளிகளில் அடிப்படை வசதி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

பள்ளிகளில் அடிப்படை வசதி: உச்ச நீதிமன்றம் உத்தரவு
பள்ளிகளில் அடிப்படை வசதி: உச்ச நீதிமன்றம் உத்தரவு
பள்ளிகளில் அடிப்படை வசதி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: பள்ளிகளில் மாணவர்களுக்கு குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை  கட்டமைப்பு வசதிகளை 6 மாத காலத்திற்குள் ஏற்படுத்தி தர வேண்டும் என்று மத்திய,  மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் மோசமாக  காணப்படுவதாகவும், எனவே பள்ளிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க  உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
 

##~~##
இவ்வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தது.
அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் குடி நீர்,வாஷ் ரூம் உள்ளிட்ட அடிப்படை  வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளனவா என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய  வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.