சொட்டுத் தண்ணி உள்ள போகாது... காருக்கும் இருக்கு ரெயின் கோட்! #flood | Don't worry about Flood... raincoat for cars

வெளியிடப்பட்ட நேரம்: 15:02 (03/11/2017)

கடைசி தொடர்பு:15:27 (03/11/2017)

சொட்டுத் தண்ணி உள்ள போகாது... காருக்கும் இருக்கு ரெயின் கோட்! #flood

வெயில் நேரமானாலும், வெள்ள நேரமானாலும் தண்ணீர்ப் பிரச்னைதான் எப்போதும் நமக்கு டிரேட்மார்க். இப்போது (flood) வெள்ள நேரம் வந்துவிட்டது. ஆனால், கார் / பைக் போன்ற வாகனங்களுக்கு இது நல்ல நேரம் இல்லை. பெட்ரோல் டேங்க்கில்கூட எரிபொருளுக்குப் பதில் தண்ணீர் புகுந்துவிடும் அபாயம் ஏகப்பட்ட வாகனங்களுக்கு உண்டு.

மழை

வெள்ள நேரத்தில் மக்களுக்குப் படகு வசதி இருக்கிறது. ஆனால், வாகனங்களுக்கு? வாகனங்களில் தண்ணீர் புகாமல் இருந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும். இந்த வெள்ளப் பாதிப்பிலிருந்து வாகனங்களைக் காக்க வழியே இல்லையா? வழி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. இங்கே அல்ல, ஸ்பெயினில்!

அமாவாசை, பௌர்ணமி மாதிரி மாதம் ஒன்று அல்லது இரண்டு முறை வெள்ளம் வருவது ஸ்பெயின் நாட்டில்தானாம். ஆண்டுக்கு 8 முதல் 9 புயல்கள், ஸ்பெயினைத் தாக்கும். அப்போதெல்லாம் மனிதர்கள் தவிர வாகனங்களுக்குத்தான் அதிக பாதிப்பு. அதனால், வாகனங்களைப் பாதுகாக்க ஒருவர் செம ஐடியா உருவாக்கியிருக்கிறார். அவர்தான் பால் டீலா. இதற்கு ‘ஃப்ளட் கார்டு’ எனப் பெயரும் வைத்துவிட்டார். ஆரம்பத்தில் ஒன்றிரண்டு ஃப்ளட் கார்டுகளை மட்டும் தயாரித்து ட்ரையல் பார்த்தவர், இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே, வலைதளம் ஆரம்பித்து விற்பனையை ஆரம்பித்துவிட்டார். https://www.floodguardph.com/ என்ற இந்த வெப்சைட்டில் ஃப்ளட் கார்டு ஆன்லைன் விற்பனை படுஜோராக நடந்துகொண்டிருக்கிறதாம்.

தண்ணீரில் மூழ்காத அளவுக்கு மிக மெல்லிய பாலி மெட்டீரியலால் தயாரிக்கப்பட்ட இதை, தரையில் விரித்து காரை உள்ளே செலுத்தி, ஜிப் போட்டு மூடிவிட வேண்டும். எப்படிப்பட்ட வெள்ளத்திலும் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட உள்ளே போகாத அளவுக்கு ஃப்ளட் கார்டைத் தயாரித்திருக்கிறார் பால் டீலா. இதைப் பயன்படுத்துவதற்கு வீடியோ வழிமுறைகளுடன் ஐந்து வழிமுறைகளைச் சொல்லியிருக்கிறார். இதை எக்ஸ்ட்ரா ஒருவர் உதவியுடன்தான் கவர் செய்ய முடியும்.

1. இந்த ஃப்ளட் கார்டை, தரையில் முழுவதுமாக விரித்துக்கொள்ள வேண்டும்.

flood

2. இதில் உள்ள ஜிப்பைத் திறந்தால், பெரிய பை போல் இருக்கும். இதை இரண்டு பேர் அகலமாகத் திறந்தபடி நிற்க வேண்டும்.

flood

3. காரை ஒருவர் ஓட்டிவந்து, இந்த கவரின் உள்ளே நிறுத்தி பார்க் செய்ய வேண்டும். காரின் ஆன்டெனாவைக் கழற்றுவது பெஸ்ட். பவர் விண்டோ கண்ணாடிகள் போன்றவை ஏற்றப்பட்டிருக்கின்றனவா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

flood

4. லேசாகக் கதவைத் திறந்து நீங்கள் வெளியே வந்தவுடன், உதவியாளர்களைக்கொண்டு ஜிப்பை மூடிவிட வேண்டும்.

flood

5. சாதாரண கார் கவரில் இருப்பதுபோன்று, இதன் நான்கு முனைகளிலும் ஹூக்குகள் இருக்கும். இந்த Buggle கொண்ட கயிறுகளை, குறுக்கும் நெடுக்குமாக உங்களுக்குப் பிடித்த வகையில் இறுக்கிக் கட்டிவிட வேண்டும். இப்போது காருக்கு ரெயின் கோட் போட்டதுபோலாகிவிடும்.

flood

இது எக்ஸ்ட்ரா ஆப்ஷன்: நீங்கள் காரை நிறுத்தும் ஏரியாவுக்குப் பக்கத்தில் பெரிய தூண்களோ, மரங்களோ இருந்தால், ஃப்ளட் கார்டில் உள்ள கயிறுகளை வைத்து அதனுடன் இணைத்துக் கட்டிவிடலாம். வெள்ளம் வரும்போது, உங்கள் கார் அடித்துச்செல்லப்படாமல் இருக்க இந்த ஐடியா. அப்படியே மிதமிஞ்சிய வெள்ளம் ஏற்பட்டாலும், ஒரு சொட்டு நீர்கூட காரின் உள்ளே புகாதவண்ணம் இதை வடிவமைத்திருப்பதாகச் சொல்கிறார் பால் டீலா. 

கார்களுக்கு ஏற்றாற்போல் இந்த ஃப்ளட் கார்டுகள் கிடைக்கின்றன. இந்தியாவில் ஹோண்டா சிவிக், சிட்டி, ஆல்டிஸ், கேம்ரி போன்ற பெரிய செடான் மாடல்களுக்கு இந்த ஃப்ளட் கார்டுகள் 15,000 ரூபாய் ஆரம்ப விலையில் கிடைக்கின்றன. இதுவே பெரிய கார்கள் என்றால், 18,000 ரூபாய் விலை. 

வெள்ளத்தைக்கூட வெல்லமா டீல் பண்ணலாம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்