Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

*  ஸ்ரியா ரிட்டர்ன்ஸ்! திருமணத்துக்குப் பின் மீண்டும் நடிக்கவிருக்கிறார் நஸ். 'மணியறையிலே ஜின்னு’ என்ற படத்தில் கணவன் ஃபஹத் பாசிலுடனே நடிக்கவிருக்கிறார். மனைவியின் ஆசைக்காக பெங்களூரில் ஒரு வீட்டை இழைத்து இழைத்துக் கட்டிக்கொண்டிருக்கிறாராம் ஃபஹத். வருடத்தின் சில மாதங்கள் அங்கே குடியிருப்பது தம்பதியின் திட்டமாம். ஹேப்பி பெங்களூரு டேய்ஸ்! 

இன்பாக்ஸ்

* ஹேய்... வெல்கம் பாய்ஸ்!’ என, ராகுல் டிராவிட்டின் மகன்களுக்கு லைக்ஸ் குவிகின்றன. ஐ.பி.எல் போட்டிகளின்போது ராகுலின் இளைய மகன் அன்வாய், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினருடன் சுறுசுறு, துறுதுறுவென ஃபீல்டிங் பயிற்சியில் ஈடுபட, 'இயல்பாகவே என் மகன்கள் சமித், அன்வாய்க்கு கிரிக்கெட் ஆர்வம் அதிகம். என்னிடம் டிப்ஸ் கேட்கக்கூட மாட்டார்கள். அவர்களாகவே பயிற்சியில் பரபரப்பார்கள்!’ எனப் பெருமிதம் காட்டுகிறார் டிராவிட். அடுத்த 'வால்’ பையன் தயார்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இன்பாக்ஸ்

* மோடியின் மேடைப்பேச்சை, பிரணவ் என்பவர் டப்ஸ்மாஷ் செய்து மோடியின் ட்விட்டர் கணக்கில் இணைத்திருக்கிறார். 'அட, இதை நான் எதிர்பார்க்கவில்லை... மகிழ்ச்சி’ என அதற்கு மோடி பதிலளிக்க, 'பார்ரா... சாமானியருக்கும் பதில் சொல்றார்!’ எனச் சின்ன ஆதரவு அலை கிளம்பியிருக்கிறது. ஆனால், சீனப் பயணத்தில், 'ஒரு காலத்தில் இந்தியர்களாகப் பிறந்ததற்கே வெட்கப்பட்ட நாட்கள் இருந்தன’ என மோடி பேசியப் பேச்சுக்கு எழுந்த எதிர்ப்பில், அந்த ஆதரவு கரைந்தோடிவிட்டது. இவர் நல்லவரா... கெட்டவரா?!

*  உலகின் மூன்றாவது பணக்காரர், பங்குச்சந்தை குரு வாரன் பஃப்பெட்டை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார்கள் குட்டிக் குழந்தைகள். 'சீக்ரெட் மில்லியனர் கிளப்’ என்ற பெயரில் அமெரிக்காவில் 14 வயது வரையிலான பள்ளிக் குழந்தைகளுக்கு தொழில் நிர்வாகம், முதலீடு, லாபம் ஈட்டுதல் ஆகியவற்றில் இருக்கும் திறமைகளைக் கண்டறிய போட்டி நடத்தியிருக்கிறார்கள். அதில் பங்கெடுத்த 4,000 குழந்தைகள் கொட்டிய முதலீட்டு ஐடியாக்கள் தனக்கே தோன்றியது இல்லை என ஜெர்க் ஆகியிருக்கிறார் வாரன். 'அமெரிக்காவுக்கு வளமான எதிர்காலம் காத்திருக்கிறது!’ எனக் குதூகலிக்கிறார் வாரன். இந்தியாவுக்கு, அதைவிட அதிகமான வளம் காத்திருக்கு வாரன்!

இன்பாக்ஸ்

* அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கான '@potus’-ல் (President of the united states) கடந்த வாரத்தில் இருந்து இயங்கத் தொடங்கினார் ஒபாமா. முதலில் ஒபாமாவை ட்விட்டரில் வரவேற்றது அவர் மனைவி @flotus. அதாங்க... first lady of the united states. ஒபாமாவுக்கு வெல்கம் சொல்லிய முன்னாள் அதிபர் கிளிண்டன், 'என் நண்பருக்காகக் கேட்கிறேன். அந்தக் கணக்கு, வெள்ளை மாளிகையிலேயே நிரந்தரமாக இருக்கும்தானே?’ என விசாரிக்க, 'நல்ல கேள்வி. நிச்சயமாக இருக்கும்’ என பதில் ட்வீட்டியிருக்கிறார் ஒபாமா. கிளிண்டனின் மனைவி ஹிலாரி, அடுத்து அதிபர் பதவிக்குப் போட்டியிட இருக்கிறார். அதனால் அக்கறையாக விசாரித்திருக்கிறார் கணவர். இதுக்கு பேர்தான் கிச்சன் பாலிட்டிக்ஸா?!

இன்பாக்ஸ்

* இந்தியாவே இரு துருவங்களாகப் பிரிந்து சல்மான் கான் வழக்கு தொடர்பாக விவாதித்துக்கொண்டிருக்க, பார்ட்டி காஷ்மீரில் செம சில்லென இருக்கிறார். படப்பிடிப்புக்காக அங்கு சென்றவர், 'பிரச்னையான தருணங்களின்போது என்னுடன் இருந்து எனக்காகப் பிரார்த்தித்த ரசிகர்களுக்கு மனப்பூர்வமான நன்றிகள்’ என முதல்முறையாக தன் மீதான வழக்கு தொடர்பாகப் பேசியிருக்கிறார். 'காஷ்மீருக்கு நல்லெண்ணத் தூதுவராகச் சம்மதமா?’ என்ற கேள்விக்கு, 'எனக்கு இந்தியாவுக்கே தூதுவராக ஆசை’ எனச் சிரிக்கிறார் பாய். ஆசைதான்!

இன்பாக்ஸ்

* இத்தனை நாள் வதந்தி, இப்போது உண்மையாகிவிட்டது. ரன்பீர் கபூருக்கும் கேத்ரீனாவுக்கும் அடுத்த வருடம் டும்டும்டும். 'இப்பவே எனக்கு வயசு 33. இதுக்கு மேலயும் கல்யாணத்தைத் தள்ளிப் போட விரும்பலை. ஆனா, உடனே கல்யாணம் பண்ணிக்க முடியாத அளவுக்கு ரெண்டு பேரும் பிஸி. அதான், அடுத்த வருஷம் கல்யாணம்!’ என, பொறுப்பான குடும்பஸ்தனாகச் சிரிக்கிறார் ரன்பீர். கேத்ரீனா தமிழ்ல நடிக்காமலேயே செட்டில் ஆகுறாங்களேனுதான் வருத்தம்!