Published:Updated:

ரூ.100 கோடி சொத்து சேர்த்தாரா சார்பதிவாளர் சிவப்பிரியா?

ரூ.100 கோடி சொத்து சேர்த்தாரா சார்பதிவாளர் சிவப்பிரியா?
ரூ.100 கோடி சொத்து சேர்த்தாரா சார்பதிவாளர் சிவப்பிரியா?

ரூ.100 கோடி சொத்து சேர்த்தாரா சார்பதிவாளர் சிவப்பிரியா?

ரூ.100 கோடி சொத்து சேர்த்தாரா சார்பதிவாளர் சிவப்பிரியா?

சைதாப்பேட்டை சார்பதிவாளராக உள்ள சிவப்பிரியா, முறைகேடான வழியில் 100 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு மற்றும் சிவப்பிரியா ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

"பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களைத் தனியார் நிறுவனங்களுக்கு முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்த சார்பதிவாளர் சிவப்பிரியா, இதற்காக பல கோடி ரூபாய்களை லஞ்சமாகப் பெற்றிருக்கிறார்' எனப் பத்திரிகையாளர் வாராகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், அதிகாரி சிவப்பிரியா ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதியரசர் சுந்தர் ஆகியோர் அடங்கிய பென்ச் உத்தரவிட்டுள்ளது. 

ரூ.100 கோடி சொத்து சேர்த்தாரா சார்பதிவாளர் சிவப்பிரியா?

வாராகியின் வழக்கறிஞர் விஜயேந்திரனிடம் பேசினோம். "பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதிகளை வீட்டுமனைகளாக மாற்றியதன் பின்னணியில் அரசு அதிகாரிகளின் சதிவேலை ஒளிந்துள்ளது. துரைப்பாக்கம் முதல் பல்லாவரம் வரையில் 200 மீட்டர் அகலத்தில் ரேடியல் சாலையை அரசு அமைத்துள்ளது. இந்தச் சதுப்பு நிலத்தில், சென்னை ஒன் என்ற தனியார் நிறுவனம் மற்றும் அரசின் பறக்கும் ரயில் நிறுவனம், எல்காட், என்.ஐ.ஓ.டி உள்ளிட்ட நிறுவனங்களும் சதுப்பு நிலப் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளன.

தொடர்ச்சியாக இந்தப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் நடைபெற்றுவருகின்றன. 6,000 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட சதுப்புநிலம் தற்போது 1,300 சதுர அடியாகக் குறைந்துள்ளன. இதுதொடர்பாக, ஏற்கெனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தோம். இதன் தொடர்ச்சியாக இந்த வழக்கில் சிவப்பிரியா என்கிற சார் பதிவாளரையும் வழக்கில் சேர்த்துள்ளோம். இவர் தற்போது சைதாப்பேட்டை சார்பதிவாளராகப் பணிபுரிந்து வருகிறார். பள்ளிக்கரணைப் பகுதியில் இவர் பதவியில் இருந்த காலகட்டத்தில்தான், பெரும்பாலான அரசு இடங்களைத் தனியார் நிறுவனங்களுக்கு முறைகேடாக பத்திரப்பதிவு செய்து கொடுத்திருக்கிறார்.

ஏரி, நீர்நிலைகள், நீர்நிலை வழித்தடங்களையும் பத்திரங்களாகப் பதிவு செய்து கொடுத்திருக்கிறார். சார்பதிவாளர் சிவப்பிரியா மீது பல்வேறு முறைகேடு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர், 2009-ம் ஆண்டு விருகம்பாக்கத்தில் சார்பதிவாளராக இருந்தபோது முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது. 'சிவப்பிரியா மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கலாம்' என்று பதிவுத்துறை உயர் அதிகாரி சுதாமணி கடிதம் அளித்திருந்தார். இவரை சிவப்பிரியா ஆள் வைத்து மிரட்டியுள்ளார்.

அதுதொடர்பாக சுதாமணி பூக்கடை காவல்நிலையத்தில் 2016-ம் ஆண்டு புகார் அளித்திருந்தார். அதற்கான சி.எஸ்.ஆர் காப்பி வழங்கப்பட்டுள்ளது. அந்த வழக்கிலும் சிவப்பிரியா மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும், அவர் சொத்து சேர்த்தது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில தகவல் பெற்றுள்ளோம். இந்த வழக்கில் அதிகாரி சிவப்பிரியா மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறோம்" என்றார் விரிவாக. 

வழக்கு விசாரணையின்மீது சார்பதிவாளர் தரப்பில் என்ன பதில் மனுத்தாக்கல் செய்யப்படப்போகிறது என்பதை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் பத்திரப்பதிவு ஊழியர்கள். 

அடுத்த கட்டுரைக்கு