ஒருதலைக் காதல் படுத்தும் பாடுகள்..! - ஒரு பெண்ணின் மனஓட்டம் | Troubles of one sided love, from a woman's perspective

வெளியிடப்பட்ட நேரம்: 10:38 (08/11/2017)

கடைசி தொடர்பு:10:38 (08/11/2017)

ஒருதலைக் காதல் படுத்தும் பாடுகள்..! - ஒரு பெண்ணின் மனஓட்டம்

காதல்

காதல் என்றாலே சுகமான அனுபவங்கள்தானே நிறைந்திருக்கும். டீன்ஏஜ் பருவத்தில் காதலின் பிடியில் சிக்காமல் தப்பிப்பவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். ஒருதலைக்காதல், ஆண்களின் ஒருதலைக்காதல்களாகவே இருக்கும். ஏன் பெண்களின் ஒருதலைக்காதல்களைப் பற்றிப் பேசக்கூடாதா. பொண்ணுங்க மனசுக்குள்ளயும் பட்டாம்பூச்சு சிறகடிச்சுப் பறக்கும். எங்களுக்கும் ஆண்கள் மேல ஒருதலையா காதல் மலரும். ஆண்கள் ஒருதலையா காதலிச்சா என்னென்ன அலப்பறை பண்ணுவாங்களோ, அதை விட பத்து மடங்கு ஒரு பொண்ணு பண்ணுவா.. அப்படி என்னதான் பண்ணுவாங்கனுதானே யோசிக்குறீங்க.. வாங்க பார்க்கலாம்.

முதல் பார்வையிலேயே அவன்மீது ஓர் ஈர்ப்பு வந்துவிட்டால் அவனுக்கே தெரியாமல் அவனைப் பார்த்து, பார்த்து ரசிப்பது ஒரு ரகம். அதே போல், தோழிக்குத் தெரிந்துவிட்டால் கிண்டல் பண்ணுவாளேங்குற பயத்துல மறைஞ்சு, மறைஞ்சு பார்ப்பாங்க பாருங்க... அப்போ மனசுக்குள்ள புறாவே கலர் கலர் கொடிகளை அசைச்சு மனசுக்குள்ள பறக்கும். 

அதுவும் நெருக்கமான நண்பனாக இருந்தால், நாம காதலைச் சொல்லி அவன் ஒத்துக்காம நம்மளுடைய காதலை உதறித் தள்ளிட்டா என்ன பண்றதுங்குற பயம் ராத்திரி தூக்கத்தையே மறக்கடிச்சுரும்.

நல்ல வேலை பாஸூ, ஃபேஸ்புக்னு ஒன்னு இருக்கு. அவனுடைய புரொபைலுக்குள்ள போய் மணிக்கணக்கா அவனுடைய முகத்தைப் பார்த்துட்டு இருந்தாலே போதும் பசியே எடுக்காது.

ஒருவேளை நமக்குப் பிடிச்ச பையனை ஃபேஸ்புக்ல தேடிக் கண்டுபிடிச்சு ஒருவழியா ரிக்வெஸ்ட் அனுப்புனா பாவி பையன் அக்செப்ட் பண்ண மாட்டான். ஒரு நிமிசத்துக்கு ஒரு முறை நோட்டிபிகேஷன் வருதானு செக் பண்ணிட்டே இருப்போம். ஒருவேளை அக்செப்ட் பண்ணலனா அவன் ஃபேஸ்புக்ல ஆக்டிவா இல்ல போலனு எங்களை நாங்களே சமாதானம் பண்ணிப்போம். 

காதல்

யதார்த்தமா பேசும்போது நம்ம ஃப்ரண்ட்(தோழி) அவன்கூட நெருங்கிப் பழகுறானு தெரிஞ்சிட்டால், அவ அன்னிலேருந்து வாழ்நாள் எதிரியா மாறிடுவா.

காதலைச் சொல்லணும்னு ஒருபக்கம், சொன்னா ஏத்துக்க மாட்டாங்களோனு மறுபக்கம் செத்து சுண்ணாம்பா அலைய வைப்பாங்க. நாங்க பசங்களை ஃபாலோ பண்ணாம அவங்க எங்களைப் பார்க்குற மாதிரி ஏதாவது பண்ணனும்னு யோசிச்சு யோசிச்சே பாதி முடிகொட்டிடும்.

ஆசை, ஆசையாய் அவனுக்காகச் சமைச்சுக் கொண்டுவரும்போது அவனுக்குக் கொடுக்கவே விடாம நண்பர்கள் பிடிங்கிச் சாப்பிடும்போது வருகிற கடுப்புக்கு அளவே கிடையாது.

நானும் எவ்வளவு நாள்தான் நல்லவளா நடிக்குறதுனு துணிஞ்சு காதலைச் சொல்லப் போகும்போது, எங்க அவன் நம்மள ரிஜக்ட் பண்ணிருவானோனு வாயை மூடிட்டு ‘பார்வை ஒன்றே போதும்’னு டையலாக் பேசிட்டு வந்துருவோம்.

சரி, நம்ம ஃப்ரெண்டு உதவி பண்ணுவாள்னு அவகிட்ட சொல்லலாம்னு தோணும், சுந்தரபாண்டியன் படத்துல வருகிற மாதிரி எனக்கு அவளைப் பிடிக்கல உன்னைத்தான் பிடிச்சிருக்குனு சொல்லிட்டானா... அதைவிட கேவலம் எதுவும் இல்லனு ஷட்டப் பண்ணிடுவோம்.

ஃபேஸ்புக்ல அதிகமா காதல் வரிகளா ஸ்டேட்டஸ் வைப்போம். அப்படியாச்சும் அவன் அதைப் பார்த்து, 'நீங்க யாரையாவது லவ் பண்றீங்களா'னு கேட்டுற மாட்டானானு ஏங்குவோம்.

ஹேர்ஸ்டைல், டிரஸ்னு ஏதாவது வித்தியாசமா செய்து அவனோட பார்வை நம்ம பக்கம் வராதானு ஆயிரம் ஐடியா பண்ணுவோம்.
பிறந்தநாளுக்கு எல்லாருக்கும் 'ஆசை' சாக்லேட் வாங்கிக் கொடுத்துட்டு அவனுக்கு மட்டும் ஃபைவ் ஸ்டார் சாக்லேட் மூலமா ஜாடை மாடையா லவ்வைச் சொல்லுவோம்.

அவன் போடுற மொக்கை ஸ்டேட்டஸையும் நல்லா இருக்குனு வாய் கூசாமப் பொய் சொல்லுவோம்.

இம்புட்டு செஞ்சாலும் உங்களுக்கு எங்களுடைய லவ் புரியலனு மனசை திடப்படுத்திட்டு ஏதாவது பொண்ணு வந்து தைரியமா லவ் சொன்னா உடனே ஓகே சொல்லுங்க பாஸ்.. அவங்களை விட அன்பா உங்களை யாரும் பார்த்துக்க முடியாது.. இனியாவது ஜாடைமாடையா பொண்ணுங்க கொடுக்குற சிக்னலைப் புரிஞ்சிக்கோங்க மக்கா!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்