

புதுடெல்லி: ராபர்ட் வதேரா மீதான ஊழல் புகார் தவறானது என்று நிரூபிக்கப்பட்டால், அவதூறு வழக்கை சந்திக்க தயாராக இருப்பதாக, அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்து இருக்கிறார்.
வதேராவுக்கு எதிரான கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டை மத்திய அமைச்சர்கள் காங்கிரஸ் தலைவர்கள் மறுத்தனர். இந்த நிலையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த கெஜ்ரிவால், தனது ஊழல் குற்றச்சாட்டில் உறுதியாக இருந்தார்.
வதேராவுக்கு எதிராக ஊழல் புகார் தவறு என்று நிரூபிக்கப்பட்டால், எத்தகைய அவதூறு வழக்கையும் சந்திக்கத் தயார் என்றும், அவர் அறிவித்தார்.
இந்த விவகாரத்தில் மத்திய சட்டத்துறை மந்திரி சல்மான் குர்ஷித் கெஜ்ரிவாலுக்கு எச்சரிக்கை விடுத்தது பற்றி கேட்டபோது, "அவர் நாட்டிற்குத்தான் சட்ட மந்திரியே தவிர காங்கிரசுக்கு அல்ல'' என்று, கெஜ்ரிவால் பதில் அளித்தார்.