Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இது மர்லின் மான்றோவுக்குப் பிடிச்ச பெர்ஃப்யூம்... ‘வாவ்’ வாசனைத் திரவியங்கள்!

என்னதான் நாம உடைகளுக்கு மேட்சிங்கா நகைகள், நெயில்பாலிஷ்னு போட்டாலும், உங்களோட தனித்தன்மையை என்றும் நினைவில் இருக்கச்செய்வது பெர்ஃப்யூம்கள்தான். அதிலும் குதூகலமான விழாக்களில் தனித்திருக்க, உங்களின் ஞாபகம் என்றுமே நிலைத்திருக்க சூப்பரான பெர்ஃப்யூம்ஸ் லிஸ்ட் இதோ...

Perfumes

ஜியோர்ஜியோ அர்மானி:ஜியோர்ஜியோ அர்மானி பெர்ஃப்யூம்

நாம் பெர்ஃப்யூம் பயன்படுத்தும் வழக்கம், சுமார் 4,000 வருடங்களுக்கு முன்பே வந்துவிட்டது. அந்தக் காலத்தில் செல்வந்தர்களின் நவநாகரிக ஆயுதமாக இருந்தது இந்த பெர்ஃப்யூம்தான். அவர்கள் வாசனைத் திரவியத்தை மேனியில் பூசிக்கொள்வது மட்டுமல்லாமல், குடிக்கவும் செய்வார்களாம்! அப்படி பெர்ஃப்யூம் பயன்படுத்திய காலம் போய், இப்போது ஒவ்வோர் இடத்துக்கு ஏற்ப பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம்.

அந்த வகையில் `ஜியோர்ஜியா அர்மானி' இந்தியாவிலேயே மிக அதிகமாக விற்பனை ஆகும் பெர்ஃப்யூம். 1982-ம் ஆண்டில்  வெளிவந்த இந்த அர்மானி வாசனை திரவியம், பல பெரிய வடிவமைப்பாளர்களால் உருவாக்கப்பட்டது. 80-க்கும் மேலான பெர்ஃப்யூம் வகைகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ளன. 4,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை இந்த அர்மானி பெர்ஃப்யூம்கள் கிடைக்கும். நாள் முழுக்க நறுமணத்துடன் இருக்க, கொஞ்சமா ஸ்பிரே பண்ணாலே போதும்... கல்யாண வீடே அர்மானி ஜாலம்தான்.

பர்பெர்ரிபர்பெர்ரி:

பெர்ஃப்யூம் உருவாக்குவது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. நல்ல வாசனைத் திரவிய உற்பத்தியாளருக்கு `ஒல்ஃபாக்‌ஷன்' (olfaction) எனும் ஆற்றல் இருக்க வேண்டும். அதில் முதல் தேர்வு 250 திரவிய நோட்ஸ்களை நுகர்ந்து பார்த்து, அத்தனை மணங்களையும் சரியாகச் சொல்ல வேண்டும். அப்படி எல்லோராலும் சரியாகக் கணிக்கக்கூடிய வாசனைத் திரவியம் `பர்பெர்ரி பெர்ஃப்யூம்'. தரத்திலும் மணத்திலும் என்றைக்கும் மேலோங்கியிருக்கும் ஒரே பெர்ஃப்யூம். க்யூட்டான பாட்டில்களில் வரும் இந்த பர்பெர்ரி வாசனைத் திரவியம், 1,000 ரூபாயிலிருந்து 4,000 ரூபாய் வரை கிடைக்கும். இதைக் கொஞ்சமா  அடிச்சாலே வாசனை  தூக்கும்!

ரால்ஃப் லாரென்:ரால்ஃப் லாரென்

வாசனைத் திரவியத்தை, ஆண்களுக்கானது, பெண்களுக்கானது என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஆனால், பெண்கள் அதிகமாக விரும்புவது ஆண்களுக்கான பெர்ஃப்யூம் நறுமணத்தைதான். உலகளவில் சுமார் 30 சதவிகிதப் பெண்கள் அதிகம் விரும்பிப் பயன்படுத்துவது ஆண்களுக்காகத் தயாரிக்கப்படும் வாசனைத் திரவியத்தைதான். அப்படிப்பட்ட பெர்ஃப்யூம்தான் இந்த `ரால்ஃப் லாரென்'.

இது ஆண்களுக்காக பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட பெர்ஃப்யூம். இந்தியாவிலேயே அதிகமாக வாங்கிப் பயன்படுத்தும் ஒரு வாசனைத் திரவியம். குறிப்பாக, பெண்கள். பல அழகிய வடிவமைப்பில் வரும் இந்த வாசனைத் திரவியம், 2,000 ரூபாயிலிருந்தே கிடைக்கும். இன்னுமா வெயிட் பண்றீங்க? 

ஹியூகோ பாஸ்:

ஹியூகோ பாஸ்ஒரே பெர்ஃப்யூம் வெவ்வேறு உடலில் வெவ்வேறு மணத்தைக் கொடுக்கும். காரணம், நம் தோல்களில் ஏற்படக்கூடிய pH (கார அமிலத்தன்மை), ஈரப்பதம், ஹார்மோன்கள் என இந்த அளவீடுகளின் மாற்றமே. அதனால், மற்றவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்று கண்மூடித்தனமாக வாங்கிவிடாதீர்கள். உங்களுக்கு அது பொருந்துகிறதா என்பதை சோதனை செய்துவிட்டு வாங்குங்கள்.

`அட போப்பா... சோதனையெல்லாம் செஞ்சுக்கிட்டு இருந்தா, என் ஆளை நான் எப்ப பார்க்கிறது?' எனும் நபரா நீங்கள்? உங்களுக்காகவே இருக்கிறது `ஹியூகோ பாஸ்' வாசனைத் திரவியம். இதை சோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை. தனித்தன்மையிலும் தரத்திலும் ஹியூகோ பாஸுக்கு முதல் இடம் உண்டு. ஆண்-பெண் என எண்ணற்ற நறுமண வகைகளைக்கொண்ட இந்த வாசனை திரவியம், 1,000 ரூபாய் முதல் 4,000 ரூபாய் வரை உள்ளது. விழாக்களை இன்னும் சிறப்பாகக் கொண்டாட இந்தப் பெர்ஃப்யூம் நிச்சயம் உதவிபுரியும்.

டியோர்:

உலகத்திலேயே மிகவும் விலை உயர்ந்த மூக்கு யாருக்கு இருந்தது தெரியுமா? `ஜீன் சார்லஸ்' என்கிற மிகச்சிறந்த பெர்ஃப்யூமர்தான் அந்தப் பெருமைக்குரியவர். இவருடைய மூக்கு, சுமார் 1 மில்லியன் டாலருக்குக் காப்பீடு செய்யப்பட்டுள்ளது எனக் குறிப்பிடுகின்றனர். இவர், தன் இறுதி நாள்களில் நுகரும் தன்மையை முற்றிலும் இழந்துவிட்டார். இருப்பினும், வாசனைத் திரவியம் தயாரிக்கும் செயலிலிருந்து அவர் எப்போதுமே பின்வாங்கியதில்லை. தொடர்ந்து தலைசிறந்த பெர்ஃப்யூம்களைக் கொடுத்துக்கொண்டே இருந்தார். அதில் ஒன்றுதான் `டியோர்' பெர்ஃப்யூம். விலை உயர்ந்த சிறந்த பெர்ஃப்யூம்களில் டியோருக்கு இணை எதுவுமே இல்லை. பண்டிகை நாள்களில் சற்றும் யோசிக்காமல் பயன்படுத்தலாம். கிளாஸ் திரவியமான `டியோர்' 6,000 ரூபாயில் தொடங்கி 30,000 ரூபாய் வரை உள்ளது.

ஷநெல்:

1924-ம் ஆண்டு வெளிவந்த `ஷநெல்' ரொம்பவே ஸ்பெஷல். கொஞ்சம் பயன்படுத்தினாலே சுற்றி உள்ளவர்களைச் சுண்டி இழுக்கும். 10,000 ரூபாய் முதல் 30,000  ரூபாய் வரை இருக்கும் இந்த வாசனை திரவியம், நம்ம மர்லின் மான்றோவுக்கு ரொம்பப் பிடிச்ச பெர்ஃப்யூம் பாஸ்! மக்கள் அனைவரும், தற்போது ஆர்கானிக் பொருள்களைத் தேடிப்போக ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில் பெர்ஃப்யூம்களிலும் ஆர்கானிக் வந்துவிட்டது. ஏபெல் ஆர்கானிக், கிறிஸ்டி ஆர்கானிக், நிம்மட் ஸ்பிரே இப்படிப் பல வகையான பெர்ஃப்யூம்கள் ஆர்கானிக்கிலும் உள்ளன.

உங்களின் சாய்ஸ் எதுவானாலும் உங்க ஸ்பெஷல் நாளில் நறுமணத்தோடும் உற்சாகத்தையும் தரக்கூடிய ஷநெல் போன்ற பெர்ஃப்யூமை வாங்குங்க.

வாழ்க்கையை வாசனையா கொண்டாடுங்க.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close