Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

ஷாரூக், சல்மான், அமீர் என மூன்று கான்களையும் வைத்து பாலிவுட்டின் காஸ்ட்லி சினிமா கனவை நிஜமாக்கும் முயற்சிகள் நடக்கின்றன எனக் கிளம்பிய பரபரப்பை புஸ்ஸாக்கிவிட்டார் ஷாரூக்.  'அதெல்லாம் புரளி. நாங்கள் எப்படி வித்தியாசமானவர்களோ, அப்படியே எங்கள் ரசிகர்களும் வித்தியாசமானவர்கள்’ எனச் சொல்லி ஆஃப் பண்ணிவிட்டார். நடிங்கனு சொல்லலே... நடிச்சா நல்லாயிருக்கும்னுதான் சொல்றோம்! 

இன்பாக்ஸ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இன்பாக்ஸ்

 ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவராக, வரும் செப்டம்பர் மாதம் அறிவிக்கப்படலாம் என்பதுதான் காங்கிரஸில் ஹாட் நியூஸ். சில நாள் இந்தியாவில் இருந்து தலைமறைவான ராகுல், அப்போது வெளிநாட்டில் ஓய்வெடுத்தார் எனச் சொன்னார்கள். ஆனால், அப்போது இந்திய அரசியலில் புதுப்புது வியூகங்கள் வகுத்துச் செயல்பட, பயிற்சிகள் எடுத்துக் கொண்டிருந்தாராம். அதனால்தான் சமீபமாக நரேந்திர மோடி மீது தீவிரப் பாய்ச்சல், எதிர்க்கட்சிகள் மீது சரமாரி விமர்சனங்கள்... என போட்டுத்தாக்குகிறாராம். இங்கே ஸ்டாலின்ஜி... அங்கே ராகுல்ஜி!  

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

 பிரதமர் மோடி காலை 5:30 மணிக்கு எழுந்ததும் செய்யும் முதல் வேலை, சமூக வலைதளங்களை அலசி ஆராய்வதுதானாம். தான் நெருக்கமாகப் பழகும் தலைவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்தோ, நாட்டு மக்களுக்குச் சொல்லும் செய்தியோ... அதைப் பற்றிய குறிப்புகளைக் கொடுத்து அப்டேட் செய்ய சொல்வாராம். ஒரு நாளைக்கு ஒரு முறையேனும், தன் சமூக வலைதளக் கணக்குகளில் தன் படமோ, ஸ்டேட்டஸோ பதிந்தாக வேண்டும் என்பது அவருடைய கண்டிப்பான உத்தரவாம். அந்த 11 பேர் கொண்ட குழுதான், தினமும் மோடியைச் சந்திப்பாங்கபோல!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

 அமெரிக்காவைச் சேர்ந்த தடகள வீரர் புரூஸ் ஜென்னர். ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர். பல வெற்றிகள், உலகப் புகழ், தொலைக்காட்சி நடிகர்... என எல்லாவற்றையும் கடந்த பின்னர், தன்னுள் ஒரு பெண் இருப்பதை உணர்ந்தார். கொஞ்சமும் தாமதிக்கவில்லை... இப்போது பெண்ணாகவே மாறிவிட்டார். மனைவியை விவாகரத்து செய்துவிட்டு முழுக்கவே தன்னைப் பெண்ணாக மாற்றிக்கொண்டா£ர். 'இனி என்னை கெய்ட்லின் என்றே கூப்பிடுங்கள்’ என்பதுதான் அம்மணியின் சமீப ஸ்டேட்மென்ட். ஓ.கே கெய்ட்லின்!

இன்பாக்ஸ்

 மல்லுவுட்டில் வெளியாகி சக்கைப்போடு போடும் படம் 'பிரேமம்’. 'நேரம்’ பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் மூன்று ஹீரோயின்கள். அதில் சாய் பல்லவி மட்டும் தமிழச்சி. நீலகிரியைச் சேர்ந்த இவர், ஒரு டாக்டர். இதற்குமுன் 'உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டான்ஸில் அசத்தியவர். ஒரு விளம்பரத்தில் இவரைப் பார்த்த அல்போன்ஸ், 'பிரேமம்’ படத்தில் நடிக்கவைத்துவிட்டார். இப்போது கேரளாவே சாய் பல்லவி மீது கிறுக்குப்பிடித்து அலைகிறது. சேட்டன்களுக்குப் பிடித்த தமிழச்சி!  

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

 பாலிவுட்டில் இது பயோபிக் சீஸன்! மேரி கோம், மில்கா சிங், தோனி... வரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஸாருதீனின் வாழ்க்கையைப் படமாக்கவிருக்கி றார்கள். 'அஸார்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் படத்தில்  அஸாருதீனாக நடிக்கவிருப்பது இம்ரான் ஹாஸ்மி. அஸாரின் வளர்ச்சி, மைதானத்தில் நடந்த சம்பவங்கள், மேட்ச் ஃபிக்ஸிங் என  உண்மைக்கு மிக நெருக்கமாக, படம் இருக்குமாம். சிம்பிளாக, தோற்றுப்போன ஒரு ஹீரோவின் கதை என்கிறது படக் குழு. அஸார் ஹீரோவா... வில்லனா?!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

 குஷ்புவிடம் ட்விட்டரில், 'நீங்கள் ஏன் கலைஞருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லவில்லை?’ எனக் கேட்டதற்கு கொதித்தெழுந்துவிட்டார். 'ஏன் நான் எதைச் செய்தாலும்  உலகத்துக்கு சொல்லிவிட்டுத்தான் செய்ய வேண்டுமா? நான் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்க மாட்டேன் என உங்களுக்கு ஏன் தோன்றுகிறது?’ என எகிடுதகிடாகப் பதில் அளித்திருக்கிறார் குஷ்பு. கூல்..!